மரத்தில் வேன் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு... ரூ.2 லட்சம் நிவாரண நிதி அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின்!

 
விபத்து

நேற்று அதிகாலையில் உளுந்தூர்பேட்டை அருகே மரத்தில் வேன் மோதி விபத்திற்குள்ளானதில் பலியானோர் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது. இந்த விபத்தில் 16 பேர் பலத்த காயமடைந்தனர். விபத்து குறித்து இரங்கல் தெரிவித்த முதல்வர் ஸ்டாலின், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் நிவாரண நிதி அறிவித்து உத்தரவிட்டுள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகேயுள்ள மாம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம் (50). இவருடன், மாம்பாக்கம், மேலப்பழுந்தை, லாடாவரம், குந்தனூர், கூராம்பட்டி கிராமங்களைச் சேர்ந்த 22 பேர் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்குப் புறப்பட்டனர். வேனை மாம்பாக்கம் வசந்தகுமார்(36) ஓட்டினார். நேற்று முன்தினம் காலை திருச்செந்தூரில் இருந்து புறப்பட்டு மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்குச் சென்றனர். பின்னர் அங்கிருந்து சொந்த ஊருக்குப் புறப்பட்டனர்.

திருவண்ணாமலை

திருச்சி, பெரம்பலூர் வழியாக வந்த இவர்களது வேன், திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் சிறுத்தனூர் ஜெயசூரியா நகர் பகுதியில் நேற்று அதிகாலை வந்த போது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம்உள்ள மரத்தின் மீது மோதியது.

இதில் வேனில் பயணம் செய்த மாம்பாக்கம் முருகன் (47), சக்தி (15), குட்டி என்ற செல்வம்(50), துரை(43), ராமலிங்கம் (50) மற்றும் கூராம்பாடியைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சித் தலைவர் ரவி (60) ஆகியோர் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் வேன் ஓட்டுநர் வசந்தகுமார் உட்பட 17 பேர் பலத்த காயமடைந்தனர். விபத்துக்குள்ளானது.

ஆம்புலன்ஸ்

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள், காயமடைந்தவர்களை மீட்டு, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், உயிரிழந்த 6 பேரின்சடலங்கள், பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டன. இதற்கிடையில், விபத்தில் பலத்த காயமடைந்த வெங்கடேசன் மனைவி தனம் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

உளுந்தூர்பேட்டை அருகே நேரிட்ட விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், அவர்களது குடும்பத்தினருக்கு தலாரூ.2 லட்சம் மற்றும் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் நிவாரண உதவி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!

From around the web