டிசம்பர் 26 மீண்டும் துக்க நாளாக மாறியது... மன்மோகன் சிங் காலமானார்... தலைவர்கள் இரங்கல்!

 
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் உடல்நிலை குறித்து நேரில் சென்று விசாரித்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்

டிசம்பர் 26 ஆழிபேரலையால் ஏற்பட்ட பாதிப்புகள் 20 வருடங்களைக் கடந்தும் இருந்து வருகிறது. இந்நிலையில், டிசம்பர் 26ம் தேதி துக்க நாளாகவே மாறிவிட்டது. இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நல குறைவு காரணமாக நேற்று காலமானார். 

முன்னதாக நேற்று மாலை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிசையளித்தும், வயது மூப்பு மற்றும் உடல்நல குறைவு காரணமாக  சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 92.

மன்மோகன் சிங்

1932ல் செப்டம்பர் 26ம் தேதி, தற்போது பாகிஸ்தானில் உள்ள கா என்ற இடத்தில் பிறந்த மன்மோகன் சிங் 2004ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரை இந்தியாவின் பிரதமராக பதவி வகித்தார்.

நாட்டின் 13வது பிரதமராக பதவி வகித்த மன்மோகன் சிங் சுமார் 33 ஆண்டுகள் மாநிலங்களவை எம்.பி.யாகவும் இருந்துள்ளார். இந்தியாவின் பொருளாதாரம், தாராளமயமாவதற்கான பணியில் முக்கிய பங்காற்றியுள்ளார்.  அவருடைய பதவி காலத்தில், உலகின் விரைவாக வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளில் ஒன்றாக இந்தியாவை உருமாற்றியதில் பெரும் பங்கு வகித்தவர்.

மன்மோகன் சிங்

1990ல் இந்தியாவின்  நிதி அமைச்சராகவும் இருந்தவர். இதன்படி 1991ம் ஆண்டு முதல் 1996ம் ஆண்டு வரை அப்போது பிரதமராக இருந்த பி.வி. நரசிம்மராவ் அமைச்சரவையில் நிதி அமைச்சராக  பணியாற்றினார். சீக்கிய மதத்தவரான மன்மோகன் சிங், இந்து சமயம் அல்லாத முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். இவரது மறைவுக்கு பிரதமர் மோடி, குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி உட்பட பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web