தல ‘அஜீத்’ ஐரோப்பியன் GT4 சாம்பியன்ஷிப் கார் பந்தயத்தில் கலந்து கொள்ள முடிவு... ரசிகர்கள் கொண்டாட்டம்!
தமிழ் திரையுலகில் ‘தல’ ஆக கொண்டாடப்பட்டு வருபவர் நடிகர் அஜீத்குமார். இவர் கடைசியாக எச்.வினோத் இயக்கத்தில் துணிவு படத்தில் நடித்திருந்தார். தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி என்ற படத்தில் நடித்து வருகிறார். அதனை தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என்ற படத்திலும் நடித்து வருகிறார். இந்த படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. அதே நேரத்தில் விடாமுயற்சி திரைப்படம் இந்தாண்டு இறுதிக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திரைத்துறையில் மட்டுமின்றி நடிகர் அஜித் கார் மற்றும் பைக் ஓட்டுவது , துப்பாக்கி சுடுதல், ட்ரோன் தயாரிப்பிலும் ஆர்வம் உடையவர். ஆரம்ப காலத்தில் கார் பந்தயத்தில் கலந்து கொண்டார். அதன்பிறகு மீண்டும் படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார்.தற்போது அஜித் மீண்டும் கார் பந்தயத்தில் கலந்து கொள்ள உள்ளார்.
2025ல் நடைபெற உள்ள European GT4 Championship மோட்டார் பந்தயத்தில் கலந்துகொள்ள நடிகர் அஜித் திட்டமிட்டுள்ளார். இதற்காக இங்கிலாந்து, ஐரோப்பா & மத்திய கிழக்கு நாட்டு அணிகளுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதற்கு நடிகர் ஜான் கொக்கேன், கார் பந்தய வீரர் நரேன் கார்த்திகேயன் உட்பட பல பிரபலங்கள் தங்களது வாழ்த்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
நடிகர் அஜித் தற்போது அடிக்கடி துபாயில் கார் பந்தய பயிற்சி எடுத்து வருகிறார். கார் பந்தயத்தில் பங்கேற்க தான் அஜித் கார் ஓட்டி பயிற்சி எடுத்து வருவதாக கூறப்படுகிறது. மீண்டும் அஜித் கார் பந்தயத்திற்கு திரும்பியுள்ளது ரசிகர்கள் அனைவருக்கும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!