இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளில் குறைந்து வரும் மக்கள் தொகை.. எலான் மஸ்க் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

 
எலான் மஸ்க்

இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளில் பிறப்பு விகிதம் குறைந்து வருவதால் மக்கள் தொகை குறைந்து வருவது குறித்து எலான் மஸ்க் கவலை தெரிவித்துள்ளார். டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் எக்ஸ் நிறுவனர் மற்றும் உலகின் மிகப்பெரிய பணக்காரர் எலான் மஸ்க், மக்கள்தொகை வீழ்ச்சி மனிதகுலத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் என்று கூறியுள்ளார்.



2100 ஆம் ஆண்டளவில் இந்தியாவின் மக்கள் தொகை 1.1 பில்லியனுக்கும் குறைவாகவும், சீனாவின் மக்கள் தொகை 73 பில்லியனாகவும் குறையும் என்பதைக் குறிக்கும் 2020 வரைபடத்தைப் பகிர்ந்தார். 2023 புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவின் மக்கள் தொகை 1.4286 பில்லியன் மற்றும் சீனாவின் மக்கள் தொகை 1.4107 பில்லியன். அதன்படி சமீபத்தில் வெளியான ஐ.நா. உலக வங்கி மற்றும் இந்திய சுகாதார அமைச்சகத்தின் புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவின் சராசரி மக்கள் தொகை வளர்ச்சி 0.92 சதவீதமாக உள்ளது.

 மக்கள் தொகை

எதிர்காலத்தில் இந்த வளர்ச்சி விகிதம் மேலும் குறையும் என்று அஞ்சப்படுகிறது. குறிப்பாக, இந்தியாவில் மக்கள்தொகை வளர்ச்சியில் பின்தங்கியுள்ள தமிழகத்தின் மக்கள்தொகை வளர்ச்சி 0.30 சதவீதம் மட்டுமே என மதிப்பிடப்பட்டுள்ளது. ரஷ்யா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளும் மக்கள் தொகை குறைவை எதிர்த்து குழந்தைகளை பெற்றுக்கொள்ள மக்களுக்கு பல சலுகைகளை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web