பத்திரம் மக்களே... சென்னையில் நாளை கனமழை பெய்யும்... வெதர்மேன் அப்டேட்!
வங்கக்கடலில் புயல் சின்னம் உருவானதைத் தொடர்ந்து நாளை நவம்பர் 12ம் தேதி தமிழகத்தின் வட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆராய்ச்சியாளர் பிரதீப் ஜான் எச்சரித்துள்ளார்.
Active phase of Rains from 12-17 November of which KTCC (Chennai) will get rains on daily basis with breaks from 12-16th November.
— Tamil Nadu Weatherman (@praddy06) November 11, 2024
The 5th spell of the monsoon will start from tonight / tomorrow morning with low pressure in southwest Bay of Bengal.
Heavy rainfall on 12th - KTCC… pic.twitter.com/djQjQ7NVbf
இது குறித்து வெதர்மேன் பிரதீப் ஜான் அவரது ட்விட்டர் பதிவில், “சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மண்டலங்களில் நாளை நவம்பர் 12ம் தேதி முதல் நவம்பர் 17ம் தேதி வரை மழை பெய்யுமெனவும், வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுநிலை நிலவுவதால் வடகிழக்குப் பருவமழைப்பொழிவு இன்றிரவு அல்லது நாளை காலை ஆரம்பமாகும் என்றும் தெரிவித்துள்ளார்.
வட மாவட்டங்களான விழுப்புரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர், சேலம், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, திருச்சி, பெரம்பலூர், கடலூர், புதுச்சேரி, கள்ளக்குறிச்சி, டெல்டா பகுதிகள் மற்றும் பெங்களூரிலும் கனமழை பெய்யும் என்று குறிப்பிட்டுள்ளார்.
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!