பத்திரம் மக்களே... இன்று அடுத்த 3 மணிநேரத்தில் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
நாளை புயல் கரையை கடக்க உள்ள நிலையில், வலுவிழந்து கரையைக் கடக்க வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையிலும், சென்னை புறநகர் பகுதிகளிலும் நேற்றிரவும், இன்று அதிகாலை முதல் மழை தொடர்ந்து பெய்து வந்த நிலையில், சென்னை உட்பட தமிழகத்தில் இன்று காலை 10 மணிக்குள் 15 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மழைக்காலங்களில் பாதுகாப்பாக இருங்க. குழந்தைகள், சிறியவர்கள், முதியவர்கள், கர்ப்பிணிகளை தனியே வெளியே அனுப்பாதீங்க. நீர் நிலைப் பகுதிகளுக்கு செல்வதைக் கூடுமானவரைத் தவிர்த்திடுங்க. மின்சாதனங்களை கவனமுடன் கையாளுங்க.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!