தமிழகத்தில் 500 வருடங்களுக்கு முன்பே முன்பே தீபாவளி கொண்டாட்டம்... கல்வெட்டுகள் மூலம் உறுதி!

 
தீபாவளி

தமிழ்நாட்டில் 500 ஆண்டுகளுக்கு முன்பே தீபாவளி கொண்டாடப்பட்டதாக புதிய கல்வெட்டு ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. திருப்பதி திருமலை மற்றும் காஞ்சீபுரம் வரதராஜப்பெருமாள் கோவிலில் உள்ள பழமையான கல்வெட்டுகளில் தீபாவளி திருநாள் பற்றிய குறிப்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

தீபாவளி

விழுப்புரத்தை சேர்ந்த வரலாற்று ஆர்வலர் செங்குட்டுவன் கூறியதாவது, கிருஷ்ணதேவராயர் கல்வெட்டில் (கி.பி.1521) தீபாவளி திருநாள் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அச்சுதேவ மகாராயர் கால கல்வெட்டுகள் (கி.பி.1533, 1537), சதாசிவ மகாராயர் (கி.பி.1553) கல்வெட்டுகள் மற்றும் ஆண்டு விவரம் தெரியாத கல்வெட்டு ஒன்றிலும் தீபாவளி திருநாளைச் சுட்டிக்காட்டுகிறது.

தீபாவளி

இதனால், 504 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்நாட்டில் தீபாவளி கொண்டாடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை, திருமலை திருப்பதி பெருமாள் கோவிலில் உள்ள கி.பி.1542-ம் ஆண்டு தமிழ் கல்வெட்டு மட்டுமே ஆதாரமாக இருந்தது. புதிய கல்வெட்டுத் தகவல்கள் காஞ்சீபுரம் வரதராஜப்பெருமாள் கோவிலில் கண்டுபிடிக்கப்பட்டு, கல்வெட்டு அறிஞர் தி.நா. சுப்பிரமணியன் 1953-ல் வெளியிட்ட “தமிழ்நாட்டு கோவில் சாசனங்கள்” நூலில் இடம்பெற்றுள்ளன. இந்த கண்டுபிடிப்பு, தமிழர் பண்பாட்டு மரபிலும், தீபாவளி பண்டிகையின் வரலாறிலும் புதிய நுணுக்கங்களை வெளிப்படுத்தியுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?