டெல்லி–சென்னை இண்டிகோ விமானம்… வெடிகுண்டு மிரட்டல் !
டெல்லியில் இருந்து இன்று காலை சென்னைக்கு இண்டிகோ விமானம் புறப்பட்டது. அந்த விமானத்தில் 100க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். நடுவானில் விமானம் பறந்துகொண்டிருந்தபோது, விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக இமெயில் மூலம் மிரட்டல் வந்தது.

இதையடுத்து, விமானம் சென்னை விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டன. வெடிகுண்டு நிபுணர்கள் விமானத்தில் தீவிர சோதனை நடத்தினர். பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

சோதனையில் வெடிகுண்டு அல்லது ஆபத்தான பொருட்கள் எதுவும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் மிரட்டல் புரளி என்று தெரியவந்தது. இண்டிகோ விமானத்திற்கு மிரட்டல் விடுத்தது யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
