ஜனவரி மாதத்தை தமிழ் மாதமாக அறிவிக்க கோரிக்கை.. அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம்!

 
ராஜா கிருஷ்ணமூர்த்தி

ஜனவரி மாதத்தை தமிழ் மொழி மற்றும் பாரம்பரிய மாதமாக அறிவிக்க அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஒரு தீர்மானம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ராஜா கிருஷ்ணமூர்த்தி எம்.பி. தலைமையில், ரோ கன்னா, அமி பேரா, ஸ்ரீ தானேதர், பிரமிளா ஜெயபால் மற்றும் சூராஸ் சுப்பிரமணியம் உள்ளிட்ட 15 உறுப்பினர்கள் அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் இந்தத் தீர்மானத்தைக் கொண்டு வந்தனர்.

இது தொடர்பாக, ராஜா கிருஷ்ணமூர்த்தி கூறுகையில், “ஒரு தமிழ்-அமெரிக்கராக, அமெரிக்காவிலும் உலகெங்கிலும் உள்ள தமிழ் மொழி, பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை மதிக்கும் இந்த இரு கட்சி தீர்மானத்தை அறிமுகப்படுத்துவதில் நான் பெருமைப்படுகிறேன். அமெரிக்கா பல்வேறு மொழிகள், கலாச்சாரங்கள், கருத்துக்கள் மற்றும் மரபுகளைக் கொண்ட இடம். இந்தத் தீர்மானம் 3.5 லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழ்-அமெரிக்கர்களின் வளமான மற்றும் தனித்துவமான கலாச்சாரம் மற்றும் நம்பமுடியாத சாதனைகள் குறித்து வெளிச்சம் போட்டுக் காட்டும் என்று நான் உண்மையிலேயே நம்புகிறேன். தமிழ்-அமெரிக்கர்கள் தங்கள் சமூகங்களில் ஏற்படுத்திய தாக்கத்தை அங்கீகரிக்க இந்தத் தீர்மானத்தை விரைவாக நிறைவேற்ற வேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன்.” பல்வேறு தமிழ் அமைப்புகள் இந்தத் தீர்மானத்தை வரவேற்றுள்ளன.

தமிழ்-அமெரிக்கர்கள் ஐக்கிய பிஏசி அமைப்பு, இந்தத் தீர்மானம் பண்டைய தமிழ் மக்களின் வளமான வரலாற்றையும் நவீன உலகிற்கு அவர்கள் அளித்த விலைமதிப்பற்ற பங்களிப்பையும் எடுத்துக்காட்டுகிறது என்று கூறியது. தமிழ்-அமெரிக்கர்கள் என்ற வகையில், தமிழ் மொழி மற்றும் பாரம்பரிய மாதத்தை உருவாக்குவதற்கான பிரதிநிதி கிருஷ்ணமூர்த்தியின் தீர்மானத்தை நாங்கள் ஆதரிக்கிறோம் என்று வட அமெரிக்க தமிழ் சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. அதேபோல், அமெரிக்க தமிழ் நடவடிக்கைக் குழு கிருஷ்ணமூர்த்திக்கு நன்றி தெரிவித்து, தீர்மானத்தை விரைவாக நிறைவேற்றுமாறு சபையை வலியுறுத்தியது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! .

From around the web