இன்று அண்ணா பல்கலை முன்பு ஆர்ப்பாட்டம்... அதிமுகவினர் கைது!

 
கைது

அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, இன்று காலை அண்ணா பல்கலைக்கழக வாயிலில் அதிமுக மாணவர் அணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக அதிமுக ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்த நிலையில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுக மாணவர் அணியினர் கைது செய்தனர். 

கைது

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக ஞானசேகரன் என்பவரைப் போலீசார் கைது செய்து, நீதிமன்ற காவலில் உள்ளார். 

எனினும் மாணவி வன்கொடுமை சம்பவத்தில், ‘சார் ஒருவரிடம்’ ஞானசேகரன் செல்போனில் பேசியதாக மாணவி புகார் தெரிவித்திருந்த நிலையில், உண்மையான குற்றவாளியையும், இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களையும் கைது செய்ய வலியுறுத்தி அதிமுக உட்பட எதிர்கட்சிகள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றன.

இந்நிலையில் இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என  எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி, உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  

அண்ணா பல்கலைக்கழக மாணவி

இந்நிலையில், மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து அண்ணா பல்கலைக்கழக வாயிலில் இன்று போலீசாரின் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுக மாணவர் அணியினர் கைது செய்யப்பட்டனர்.  

அண்ணா பல்கலைக்கழக வளாகம் வெளியே போராட்டம் நடத்த காவல்துறை அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில், தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில், அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுக மாணவர் அணி செயலாளர் சிங்கை ராமச்சந்திரன் உள்ளிட்டோரை போலீசார் கைது செய்தனர்

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web