கேப்டன் நினைவஞ்சலி... அமைதி பேரணி நடத்த அனுமதி மறுப்பு…!

 
கேப்டன்


தமிழ் திரையுலகில்  கேப்டன் என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் ‘விஜயகாந்த்’ கடந்த ஆண்டு இதே நாளில் மண்ணை விட்டு மறைந்தார். அவர் மறைந்து இன்றுடன் ஓராண்டாகும் நிலையில்  மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் முதலாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.இதனையொட்டி அவரது நினைவிடத்தில், அதிகாலை முதலே நீண்ட வரிசையில் கேப்டன் விஜயகாந்த்தின் நினைவிடத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்களும், தேமுதிக தொண்டர்களும் திரண்டு மரியாதை செலுத்தி வருகின்றனர்.  

கேப்டன்


விஜயகாந்த் நினைவு தினத்தை குரு பூஜையாக கடைப்பிடிக்க தேமுதிக முடிவு செய்துள்ளது. இவ்விழாவில் கலந்து கொண்ட முதல்வர் ஸ்டாலின், இபிஎஸ், விஜய் என அனைவருக்கும்  அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேடு நினைவிடத்தில் காலை 9.30 மணிக்கு குரு பூஜை நடைபெற்று வருகிறது.  
இந்நிலையில், விஜயகாந்த் நினைவிடத்தில் 25000க்கும்  மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்படவுள்ளது. இதனிடையே, தேமுதிக பொதுச் செயலர் பிரேமலதா தலைமையில், மாநில தேர்தல் ஆணையம் அலுவலகத்திலிருந்து, விஜயகாந்த் நினைவிடம் வரை அமைதி பேரணி நடத்த திட்டமிட்டிருந்தது.

கேப்டன்
ஆனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும் என காவல்துறை அனுமதி மறுப்பு தெரிவித்துள்ளனர். இதனால், தடையை மீறி மாநில தேர்தல் அலுவலகத்தில் இருந்து பேரணி வர தேமுதிக திட்டமிட்டு இருப்பதாக  தகவல் வெளியாகியுள்ளது.

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

From around the web