துணை முதல்வர் மகன் இன்பநிதிக்கு புதிய பதவி... உற்சாகத்தில் முதல்வர் குடும்பம்!

 
இன்பநிதி


 
தமிழகத்தில் திமுகவின் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி நடந்து கொண்டிருக்கின்றது. இவரைத் தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் அரசியலில் துணை முதல்வராக களமிறக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து   சினிமாவிலிருந்து ஒட்டுமொத்தமாக விலகினார்.
முதலில் இவருக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் பதவி மட்டுமே வழங்கப்பட்டு அதன் பிறகு திமுகவின் இளைஞர் அணி தலைவராகவும் பதவி வகித்தார். இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டது

இன்பநிதி

தற்போது தன் அப்பா ஸ்டாலின் உடன் சேர்ந்து உதயநிதி திமுக ஆட்சியை சிறப்பாக நடத்திக் கொண்டிருக்கின்றார். இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் பேரனும் துணை முதல்வர் உதயநிதியின் மகனுமான இன்ப நிதி (21) கலைஞர் டிவியின் நிர்வாக பொறுப்பில் தற்போது சேர்ந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  

 

அச்சச்சோ! உதயநிதி ஸ்டாலின் வெற்றியை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்!
இதனைத் தொடர்ந்து இவர் தினமும் காலை 11 மணிக்கு அலுவலகம் வந்து மாலை 5.30 மணி வரை பணிபுரிய இருப்பதாக தெரிகிறது. இவர்  ஐரோப்பிய நாடான பிரிட்டன் தலைநகர் லண்டனில் நிதி நிர்வாகம் தொடர்பான பட்டப்படிப்பை முடித்தவர். ஜூன் 3ம் தேதி  திமுக தலைமை அலுவலகமான அறிவாலய வளாகத்தில் உள்ள கலைஞர் டிவி அலுவலகத்திற்கு இன்ப நிதியை அவருடைய தாய் கிருத்திகா அழைத்து வந்தார். முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்காவின்  சகோதரி மகன் கார்த்திகேயன் அந்த நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியாக தற்போது உள்ள நிலையில் அவரது அறையில் அமைக்கப்பட்ட அலுவலகத்தில் மகன் இன்ப நீதியை அமர வைத்து அவருக்கு கிருத்திகா வாழ்த்து தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி நிறுவனத்தின் நிதி நிர்வாக பணிகள்  குறித்து  அங்கு பணியாற்றும் முக்கிய நிர்வாகிகளுடன் தினமும் இன்பநதி ஆலோசித்து வருவதாக கூறப்படுகின்றது

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது