வெள்ளை மாளிகையின் துணை செய்தித் தொடர்பாளர்.. இந்திய வம்சாவளியை நியமித்த அதிபர் ட்ரம்ப்!

 
 குஷ் தேசாய்

அமெரிக்காவின் 47வது அதிபராக குடியரசுக் கட்சியைச் சேர்ந்த டொனால்ட் டிரம்ப் கடந்த 20 ஆம் தேதி பதவியேற்றார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பலர் அவரது அமைச்சரவையிலும், அமெரிக்க அரசாங்கத்தில் பல்வேறு உயர் பதவிகளிலும் உள்ளனர். இந்த நிலையில், வெள்ளை மாளிகையில் உயர் பதவிக்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவரை நியமிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.


அதன்படி, முன்னாள் இந்திய வம்சாவளி பத்திரிகையாளர் குஷ் தேசாய் வெள்ளை மாளிகையின் துணை செய்தித் தொடர்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். குஷ் தேசாய் முன்பு 2024 குடியரசுக் கட்சியின் தேசிய மாநாட்டிற்கான துணை தகவல் தொடர்பு இயக்குநராகவும், அயோவா குடியரசுக் கட்சியின் தகவல் தொடர்பு இயக்குநராகவும் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web