தடம் புரண்டன ரயில்கள்! தவிக்கும் பயணிகள் !

 
தடம் புரண்டன ரயில்கள்! தவிக்கும் பயணிகள் !


இந்தியவில் தென்மேற்கு பருவமழை காரணமாக வடமாநிலங்களில் பேய்கனமழை பெய்து வருகிறது. இதனால் ரயில் தண்டவாளங்கள் தண்ணீரில் மூழ்கி நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

மங்களூரு சந்திப்பில் இருந்து சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸ் செல்லும் அபாசெஞ்சர் ரயில் தென் கோவாவில் துத்ஸாகர் மற்றும் சோனாலிம் இடையே தடம் புரண்டது.

ரயில் எண். 01134 மங்களூரு ஜே.என் – சத்ரபதி சிவாஜி மகாராஜ் முனையத்திற்கு, மகாராஷ்டிராவில் சிப்லூன் மற்றும் காமத்தே இடையே வஷிஷ்டி நதி நிரம்பி வழிந்ததால் மட்கான் லோண்டா மிராஜ் வழியாக திருப்பப்பட்டது. துத்ஸாகர் மற்றும் சோனலிம் பிரிவுக்கு இடையே தடம் புரண்டது. இந்த ரயில் மீண்டும் தெற்கு கோவாவில் உள்ள குலேமுக்கு மற்றொரு ரயில் மூலம் இழுக்கப்பட்டது. அதேபோல் அப்பகுதியில் நிலச்சரிவும் ஏற்பட்டதால் பெரும் அச்சசம் உண்டானது.

மற்றொரு ரயில், ஹஸ்ரத் நிஜாமுதீன்-வாஸ்கோ டா காமா எக்ஸ்பிரஸ், நிலச்சரிவு காரணமாக காரன்சோல் மற்றும் துத்ஸாகர் இடையேயான தடங்களில் நிறுத்தப்பட்டது. இந்த ரயில் மீண்டும் கர்நாடகாவில் உள்ள கேஸில் ராக் நிலையத்திற்கு இழுத்து வரப்பட்டது.

தடம் புரண்டன ரயில்கள்! தவிக்கும் பயணிகள் !

இந்த ரயிலில் பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக இருந்தனர் எனத் தெரிவித்துள்ளது தென்மேற்கு ரயில்வே.ரயில் சேவைகளை விரைவாக மீட்டெடுப்பதற்காக பயிற்சி பெற்ற தொழில்நுட்பக் குழுவினருடன் சேர்ந்து நிலச்சரிவு ஏற்பட்ட இடத்திற்கு மீட்பு குழு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சோனாலியம்- குலெம் மற்றும் துத்ஸாகர்-காரன்சோல் இடையே நிலச்சரிவு ஏற்பட்டதால் மேலும் 15 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. லோந்தா-வாஸ்கோ டா காமா, எஸ்.எஸ்.எஸ். ஹுப்பல்லி-பெலகாவி மற்றும் பெலகாவி-எஸ்.எஸ்.எஸ். ஹுப்பல்லி இடையே 3 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தென் மேற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

From around the web