பக்தர்கள் அதிர்ச்சி... ரூ1,00,00,000/- மின் கட்டணம் பாக்கி... சித்திரை திருவிழாவிற்கு மின்சாரம் தரமுடியாது... நகராட்சி திட்டவட்டம்!

மதுரை சித்திரைத் திருவிழாவிற்கு ஒரு கோடி ரூபாய்க்கு மேல் மின் கட்டணம் செலுத்த வேண்டியிருந்ததால், மின்சாரம் வழங்குவதில் சிக்கல் எழுந்தது. இந்தப் பிரச்சினை சட்டமன்றத்தில் எதிரொலித்ததை அடுத்து, நிலுவைத் தொகை செலுத்தப்பட்டு பிரச்சினை தீர்வு காணப்பட்டது. திருவிழா ஏற்பாடுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
தமிழகத்தில் உலகப்பிரசித்தி பெற்ற மதுரை சித்திரைத் திருவிழா ஏப்ரல் 29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.மதுரை நகரமே விழாக்கோலம் பூண்டு வரும் நிலையில் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியன கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் வைபவம், மே 12ம் தேதி நடைபெற உள்ளது. திருவிழாவில் கலந்து கொள்ள லட்சக்கணக்கில் பக்தர்கள் வருகை தர உள்ளனர். இதனையடுத்து அடிப்படை வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் சுகாதார வசதிகள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் மின் கட்டணம் செலுத்த வேண்டியிருப்பதால், அந்த கட்டணத்தை செலுத்தினால் மட்டுமே சித்திரைத் திருவிழாவுக்கு மின்சாரம் வழங்க முடியும் மதுரை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இந்த உத்தரவு பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இன்றைய சட்டசபை கூட்டத்தில் இந்த பிரச்சனை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் பேசிய எதிர்க்கட்சித் துணைத்தலைவர் ஆர் பி உதயகுமார், மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சார்பில் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் மின் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. அந்த கட்டணத்தை செலுத்தினால் மட்டுமே சித்திரைத் திருவிழாவுக்கு மின்சாரம் வழங்க முடியும் என மாநகராட்சி ஆணையர் தெரிவித்திருக்கும் தகவல் அமைச்சருக்கு தெரியுமா என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, கடந்த 2017 ஆண்டு முதல் தற்போது வரை 5 ஆண்டுகளுக்கு செலுத்த வேண்டிய நிலுவை தொகை இருந்துவந்தது. இந்நிலையில் சித்திரை திருவிழாவிற்காக ரூ 2 கோடி நிலுவை தொகை நேற்று மாநகராட்சிக்கு செலுத்தப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை தீபத்திருவிழாவிற்கு 1.5 கோடி நிலுவை தொகை வழங்கப்பட்டது. இதன் மூலம் சித்திரை திருவிழா பிரச்சினை முடிந்துவிட்டது. கள்ளழகர் பட்டை அணிந்து, ஆனந்தமாக, அழகாக, மகிழ்ச்சியோடு ஆற்றில் இறங்குவார் எனக் கூறியுள்ளார்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!