பக்தர்களிடம் ரூ.1 கோடி கடன் பெற்றதால் விபரீதம்.. தீர்த்தத்தில் விஷம் கலந்து 5 பேரை கொல்ல முயன்ற பூசாரி!
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகே தீர்த்ததில் விஷம் கலந்து 5 பேரை கொல்ல முயன்ற நபரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.அம்மகளத்தூரைச் சேர்ந்த கணேசன் என்பவரது குடும்பத்திற்கும், முரளியின் குடும்பத்துக்கும் பழக்கம் இருந்துள்ளர்க்ய். ஜோசியம் பார்க்கும் முரளி, தன்னிடம் வரும் பக்தர்களிடம் லட்சக்கணக்கில் கடன் வாங்கி, தற்போது ஒரு கோடிக்கும் மேல் கடன் வாங்கியுள்ளார். இதைத் திருப்பித் தர முடியாத முரளி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.
தான் இறந்தால் நண்பரின் குடும்பத்தினர் பணத்திற்காக துன்புறுத்துவார்கள் என எண்ணி கணேசன், கண்ணன், முத்தையன் உள்ளிட்ட 5 பேருக்கு விஷம் கலந்த தீர்த்தம் வழங்கினார்.அனைவரும் மயங்கி விழுந்ததால், அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இது தொடர்பாக கணேசன் அளித்த புகாரின் பேரில் முரளி மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையறிந்த அக்கம்பக்கத்தினர் அனைவரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில் கண்ணன் கொடுத்த புகாரின் பேரில் கீழ்குப்பம் போலீசார் முரளி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!