அதிகாலையில் குவிந்த பக்தர்கள்... நடராஜருக்கு தங்க கவசம்... ஆருத்ரா தரிசனம்!

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் இன்று ஆருத்ரா தரிசன திருவிழாவை முன்னிட்டு அதிகாலையிலேயே பக்தர்கள் குவிய தொடங்கி விட்டார்கள். கடந்த ஜனவரி 4ம் தேதி காப்புகட்டுதலுடன் விழா துவங்கிய நிலையில், சிகர நிகழ்ச்சியான ஆருத்ரா தரிசனம் இன்று காலை துவங்கியது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் நடைபெறும் ஆருத்ரா தரிசனம் திருவிழா இந்த வருடம் கடந்த ஜனவரி 4ம் தேதி சனிக்கிழமை காப்பு கட்டுதலுடன் துவங்கியது.
ஆருத்ரா தரிசன திருவிழாவை முன்னிட்டு ராமநாதசுவாமி கோயிலில் தினந்தோறும் காலையிலும், மாலையிலும் மாணிக்கவாசகர் தங்க கேடயத்தில் மூன்றாம் பிரகாரத்தில் உலா வரும் நிகழ்ச்சியும், நடராஜருக்கு தினமும் சிறப்பு மகா தீப ஆராதனை பூஜையும் நடைபெற்று வந்தது.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று ஜனவரி 13ம் தேதியன்று அதிகாலை ஆருத்ரா தரிசன நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு நடராஜருக்கும், அம்பாளுக்கும் தங்க கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு மகா தீப ஆராதனை பூஜைகள் நடைபெற்று வருகின்றன. அதிகாலையிலேயே பக்தர்கள் குவிந்து தரிசித்து வருகின்றனர்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!
மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!