யாரையும் பணியை விட்டு நிறுத்தவில்லை! கே என் நேரு கதறல்!

 
யாரையும் பணியை விட்டு நிறுத்தவில்லை! கே என் நேரு கதறல்!

தமிழகம் முழுவதும் அம்மா உணவகங்கள் ஏழை எளிய மக்களின் பசிப்பிணி போக்க செயல்படுத்தப்பட்டு வருகின்றன. கொரோனா ஊரடங்கு காலத்தில் இதன் மூலம் இலவச உணவுகள் வழங்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது ஆட்சி மாற்றத்தின் காரணமாக அம்மா உணவகங்கள் மூடப்பட்டு விடுமோ என்ற அச்சம் நிலவியது. அப்படி எதுவும் இதுவரை நடக்கவில்லை.

யாரையும் பணியை விட்டு நிறுத்தவில்லை! கே என் நேரு கதறல்!


ஆனால் அம்மா உணவகங்களில் இரவு சப்பாத்திக்கு பதிலாக சாதம் வழங்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. தற்போது சுழற்சி முறையில் பணிக்கு வரச் சொல்வதாகவும் பல இடங்களில் இருந்து பல்வேறு விதமான குற்றச்சாட்டுக்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இதுகுறித்து அமைச்சர் நேரு செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் பணி புரியும் பெண்கள் அதிக அளவில் உள்ளனர்.

இதனால் அந்த குறிப்பிட்ட உணவகத்தில் மட்டும் சுழற்சி முறையில் பணிக்கு வர அறிவுறுத்தப்பட்டுள்ளது. யாரையும் பணியை விட்டு நீக்கவில்லை எனத் தெரிவித்துள்ளார்.மேலும் தமிழகத்தில் உள்ள அம்மா உணவகங்களில் செலவு செய்வதில் சிரமம் உள்ளதாகவும், கூடுதலாக எவ்வாறு அம்மா உணவகங்களை திறக்க முடியும் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

யாரையும் பணியை விட்டு நிறுத்தவில்லை! கே என் நேரு கதறல்!

அத்துடன் அது குறித்து முதல்வர் தான் முடிவெடுப்பார் எனத் தெரிவித்துள்ளார்.
வட கிழக்கு பருவ மழை தொடங்க உள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழகம் முழுவதும் அனைத்து கால்வாய்களிலும் தூர்வாரும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

From around the web