மதுக்கடையில் தகராறு.. இளைஞர் அடித்துக் கொலை... உறவினர்கள் போராட்டம்!
கடலூர் மாவட்டத்தில், மதுக்கடையில் ஏற்பட்ட தகராறில் இளைஞர் ஒருவர் அடித்துக் கொலைச் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே வெள்ளபாக்கம் லட்சுமி நகரைs சேர்ந்தவர் முத்து (32). இவருக்கு திருமணமாகி 7 மாத கைக் குழந்தை ஒன்று உள்ள நிலையில், அந்த பகுதியில் செண்டரிங் வேலை செய்து வந்தார் முத்து.
இந்நிலையில் கடந்த ஜனவரி 8ம் தேதி தனது நண்பர்கள் சிலருடன் சேர்ந்து புதுச்சேரி அடுத்த பாகூர் சித்தேரி அணைக்கட்டு பகுதியில் உள்ள ஒரு தனியார் மதுக் கடைக்கு சென்ற முத்து, அங்கு நண்பர்களுடன் சேர்ந்து மது குடித்துள்ளார். இவர்களுக்கு அருகே இரண்டாயிர விளாகம் கிராமத்தைச் சேர்ந்த ஆனந்த ராஜ், குருவி நத்தத்தைச் சேர்ந்த ரஞ்சித், ராஜேஷ் ஆகியோரும் மது குடித்துள்ளனர். அப்போது முத்து தரப்பினருக்கும், ஆனந்த ராஜ் தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் மாறி மாறி தாக்கிக் கொண்டுள்ளனர்.
ஒரு கட்டத்தில் நண்பர்கள் அங்கிருந்து தப்பியோடிய நிலையில் தனியாக சிக்கிக்கொண்ட முத்துவை ஆனந்தராஜ் தரப்பினர் கற்கள் மற்றும் பீர் பாட்டிலால் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த முத்து ரத்த வெள்ளத்தல் அங்கேயே சரிந்துள்ளார். உடனடியாக அங்கிருந்தவர்கள் முத்துவை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு முதலுதவி அளிக்கப்பட்ட முத்து மேல் சிகிச்சைக்காக ஜிப்மர் மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டார். இது குறித்து முத்துவின் மனைவி அளித்த புகாரின் பேரில் பாகூர் போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து இரண்டாயிர விளாகம் பகுதியைச் சேர்ந்த ஆனந்தராஜ், குருவிநத்தம் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் மற்றும் ரஞ்சித் ஆகியோரை கைது செய்தனர்.
இந்நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த முத்து, நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து கொலை முயற்சி வழக்கு, கொலை வழக்காக மாற்றப்பட்டது. இதனிடையே கொலை சம்பவம் நடந்த மதுக்கடையின் முன்பு இறந்த முத்துவின் உறவினர்கள் மற்றும் வெள்ளப்பாகத்தைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு, கடையின் முன்பு அமர்ந்து மறியல் செய்தனர்.
சாதி அடிப்படையில் முத்துவை கடுமையாக தாக்கி கொலை செய்துள்ளனர். எனவே வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கை மாற்ற வேண்டும். எல்லையில் மது குடிக்க வரும் தமிழக இளைஞர்களை தொடர்ந்து தாக்கி கொலையும் செய்து வருகின்றனர். புதுச்சேரி எல்லைக்கு மது குடிக்க வரும் தமிழக இளைஞர்களுக்கு எந்தவித பாதுகாப்பும் இல்லை. எனவே பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!