முகம் சுளித்த பக்தர்கள்... வடகலை, தென்கலை பிரிவினர் இடையே தகராறு... சொர்க்கவாசல் திறப்பில் பரபரப்பு !
இன்று உலகம் முழுவதும் பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அந்த வகையில் காஞ்சிபுரம் அஷ்டபுஜ பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்வு இன்று காலை நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரபந்தம் பாடுவதில் வடகலை, தென்கலை பிரிவினர் இடையே தகராறு ஏற்பட்டது.
யார் முதலில் பிரபந்தம் பாடுவது என வடகலை, தென்கலை பிரிவினர் இடையே கோவில் வளாகத்திலேயே தகராறு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தென்கலை பிரிவினர் முதலில் பாட அனுமதி உள்ள நிலையில், வடகலை பிரிவினர் நாங்களும் பாடுவோம் என வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் மோதல் உருவானது.
இரு பிரிவினருக்கிடையே கோவில் நிர்வாகம் மற்றும் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்தனர். இதனையடுத்து இரு தரப்பினரும் சேர்ந்து பாடினர். விழாக்களின்போது வடகலை, தென்கலை பிரிவினர் தகராறில் ஈடுபட்டு வருவதால் பக்தர்கள் முகம் சுளித்தனர். சொர்க்கவாசல் திறப்பு நிகழ்வில் வடகலை, தென்கலை பிரிவினர் இடையே தகராறு ஏற்பட்டதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!