சொத்து பிரிப்பதில் மகன்களுக்குள் தகராறு... 3 நாட்களாக அடக்கம் செய்யாமல் தந்தையின் சடலத்தைப் போட்டு வைத்திருந்த அவலம்!

 
பாலய்யா
 

 

தெலுங்கானா மாநிலத்தில், தந்தை உயிரிழந்த நிலையில், சொத்துப் பிரிப்பதில் தகராறு ஏற்பட்டதால் அவரின் மகன்களுக்கும் இடையே எழுந்த போட்டியில் தந்தையின் சடலத்தை தொடர்ந்து மூன்று நாட்களாக அடக்கம் செய்யாமல் அப்படியே வைத்திருந்த சம்பவம் தெலுங்கானா மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தெலங்கானா மாநிலம் யாதாத்ரி மாவட்டம் மோட்குரு மண்டலம் சதர்சபுரம் கிராமத்தை சேர்ந்த தம்பதியர் பாலய்யா- லிங்கம்மா. இந்த தம்பதியருக்கு நரேஷ், சுரேஷ் என்ற இரு மகன்களும், ஷோபா, சோனி என்ற இரு மகள்களும் உள்ளனர். மகன்கள், மகள்கள் என அனைவருக்கும் நல்ல இடத்தில் திருமணம் செய்து வைத்த நிலையில், அவரவர் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர். 

ஆம்புலன்ஸ்
இந்நிலையில் லிங்கம்மாவும், அவரது மூத்த சகோதரர் ராமுலுவும் சேர்ந்து சூர்யாபேட்டை மாவட்டம், திருமலகிரி மண்டலம், தட்டிப்பமுலா கிராமத்தில் 3 ஏக்கர் நிலம் வாங்கியுள்ளனர். இதில் அவர்கள் இருவர் சேர்ந்து அரை ஏக்கர் நிலத்தை விற்று விட்டனர். மீதமுள்ள நிலத்தில் ராமுலு தங்கை லிங்கம்மா மற்றும் தனது மகள் லிங்கம்மா, மூத்த மருமகள் (மூத்த மகன் நரேஷ் மனைவி அருணா) பெயரில் எழுதி பட்டா செய்து கொடுத்துள்ளார். இதனால் அந்த நிலத்தில் தனக்கும் பங்கு வேண்டும் என இளைய மகன் சுரேஷ் வற்புறுத்தி வந்தார்.
இந்நிலையில் பாலய்யா உடல் நலம் பாதிக்கப்பட்டு கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு உயிரிழந்துள்ளார். பாலய்யா உயிரிழந்த தகவல் அறிந்த உறவினர்களும், நண்பர்களும், ஊர்காரர்களும் அவரது இறுதி சடங்கில் பங்கேற்க வந்தனர். 
ஆனால் இறுதி சடங்கு செய்ய வேண்டுமென்றால் 1 ஏக்கர் நிலத்தை பிரித்து தர வேண்டும் என சகோதரர்கள் இருவருக்கும் இடையே மீண்டும் சொத்து பிரிப்பது குறித்து பஞ்சாயத்து ஏற்பட்டது. இதனால் தந்தையின் உடலைக் கடந்த 3 நாட்களும் இறுதிச் சடங்குகள் செய்ய விடாமல் பிரிசர் பாக்சில் வைத்திருந்துள்ளனர். 
கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சகோதரர்கள் இருவரும் தந்தை பாலையாவை வாகனத்தில் அழைத்துச் சென்று தந்தை பெயரில் இருந்த 12 ஏக்கர் நிலத்தை தங்கள் பெயரில் பிரித்து பத்திரப்பதிவு செய்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது. ஆளுக்கு 6 ஏக்கர் நிலம் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கிடைத்த நிலையிலும் இரண்டு மகன்களும் தற்போது ஒரு ஏக்கர் நிலத்திற்காக மீண்டும் சண்டையிட்டு கொண்டனர். 
கணவரின் மரணத்தால் துக்கமடைந்த மனைவி லிங்கம்மா மகன்கள் சண்டையால் என்ன செய்வது என்று தெரியாமல் மூன்று நாட்களாக கணவரின் சடலத்தை பார்த்து கதறி அழுதுக் கொண்டிருந்துள்ளார். 
தகனம் முடிந்ததும், பேசி கொள்ளலாம் என உறவினர்களும், ஊர்க்காரர்களும் எடுத்துக் கூறியும் இருவருமே அதனை ஏற்க மறுத்து விட்டனர். இதனால் இறந்தவரின் உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் மூன்று நாட்களாக துக்கவிட்டிலேயே தங்கி இருந்தனர். இந்த விவகாரம் போலீசாருக்குத் தெரிய வந்த நிலையில்,  ராமண்ணாப்பேட்டை சி.ஐ. வெங்கடேஷ்வர்லு, மோட்கூர் எஸ்.ஐ நாகராஜு ஆகியோர் போலீசாருடன் கிராமத்துக்குச் சென்று மோதல் ஏற்படாமல் இருக்க ஏற்பாடு செய்தனர்.

உத்தரபிரதேச போலீஸ்
பின்னர் இரு மகன்கள் மற்றும் மருமகள்களிடம் பேசி இறுதிச்சடங்குகளை செய்ய வேண்டும், இல்லையெனில் பஞ்சாயத்து ஊழியர்களைக் கொண்டு போலீசாரே இறுதி சடங்கு நடத்துவோம் என எச்சரித்தனர்.
இதனையடுத்து லிங்கம்மாவின் மூத்த மருமகள் பெயரில் ராமுலு எழுதி கொடுத்த ஒரு ஏக்கர் நிலத்தை பத்திரப்பதிவு செய்ய ஊர் பெரியவர்களிடம் போலீசார் பேசி, ஒப்பந்தப் பத்திரம் எழுதிக் கொடுத்த பின்னர் பஞ்சாயத்து முடிந்தது. இறுதியாக நேற்று காலை இறுதிச் சடங்கு நடைபெற்றது. சொத்துக்காக தந்தையின் இறுதிச் சடங்குகளை மூன்று நாட்களாக செய்யாத பாலையாவின் மகன்களின் நடத்தையை உறவினர்களும், கிராம மக்களும் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!

From around the web