’மரியாதையில்லாமல் நடத்துகிறார்கள்’.. பள்ளியில் ஃபேன்களை உடைத்து மாணவிகள் போராட்டம்!
மத்தியப் பிரதேசத்தில், அரசுப் பள்ளி வகுப்பறையில் மாணவிகள் மின்விசிறியை உடைத்தும், ஜன்னல்களை உடைக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. போபாலில் உள்ள சரோஜினி நாயுடு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று இந்த சம்பவம் நடந்துள்ளது. ஒரு மாதத்திற்கு முன்பு நியமிக்கப்பட்ட முன்னாள் ராணுவ வீராங்கனை வர்ஷா ஜாவுக்கு எதிராக நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகள் பள்ளி வளாகத்தில் முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் வகுப்பறையை சுத்தம் செய்யவும், புல்வெளியை சுத்தம் செய்யவும் வற்புறுத்துகின்றனர்.
ஐந்து நிமிடம் தாமதமாக வந்தாலும் வெயிலில் நிற்க வைக்கிறார்கள். சிறிய தவறுகளுக்கு கூட கடுமையாக தண்டிக்கப்படுகின்றன. மாலை ஆறு மணிக்கு பள்ளி முடிந்து விடுவதால், தூரத்தில் இருந்து வரும் மாணவிகள் வீட்டிற்கு செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர்,' என்றனர். மேலும், தவறு செய்யும் மாணவர்களைக் கடுமையாகத் திட்டுகிறார். மரியாதையில்லாமல் பேசுகிறார். இதுகுறித்து பள்ளி தலைமையாசிரியரிடம் தெரிவித்தும் யாரும் கண்டுகொள்ளவில்லை என குற்றம் சாட்டியுள்ளனர்.
ஆனால், இதற்கு மறுப்பு தெரிவித்த பள்ளி தலைமையாசிரியர், ``அடுத்த நடவடிக்கை குறித்து, கல்வித்துறை உயர் அதிகாரிகள் முடிவு செய்வார்கள்,'' என, மறுபுறம், குற்றம் சாட்டப்பட்ட மாணவிகளை ஆசிரியர்கள் தண்டிக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டதாகவும் கூறினார். இதற்கிடையில், சம்பவத்தின் தீவிரத்தை உணர்ந்த கல்வி இயக்குனர், பள்ளிக்கு சென்று, வர்ஷா ஜாவை காலவரையற்ற விடுமுறையில் அனுப்பினார். மேலும், காவல்துறையினரும் பள்ளிக்கு சென்று சேதமடைந்த பொருட்களை பார்வையிட்டனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!