அடுத்தடுத்து நாதகவில் அதிர்ச்சி... நிர்வாகிகள் கூண்டோடு விலகல்!
நாம் தமிழர் கட்சியில் அடுத்தடுத்து நிர்வாகிகள் விலகி வருகின்றனர். கொஞ்சம் கொஞ்சமாக கூடாரம் காலியாகி வருவதாக தொண்டர்கள் தெரிவித்துள்ளனர். அந்த வகையில் தர்மபுரி வெண்ணாம்பட்டியில், நாதகவில் இருந்து விலகிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. நிர்வாகிகள் இது குறித்து விரைவில் பாலக்கோடு சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்களும் சுமார் 300 பேர் விலகுகின்றனர்.
அதன்படி முக்கிய பொறுப்பாளர்களான அரூர் சட்டமன்ற தொகுதி தலைவர் இளையராஜா, பொருளாளர் சுரேஷ், அரூர் ஒன்றிய பொறுப்பாளர் சிவா, அரூர் தொகுதி துணை செயலாளர் வேடியப்பன், ஒன்றிய பொருளாளர் நிவாஸ், கிளை பொறுப்பாளர் அரவிந்தன், ஒன்றிய பொறுப்பாளர் மணிகண்டன், மத்திய செயலாளர் சிவமூர்த்தி, தொகுதி இணைச்செயலாளர் முருகேசன், ஒன்றிய செயலாளர் பசுபதி, பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி பொருளாளர் ஜெயக்குமார், மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் கலைச்செல்வி, கோகிலா உட்பட பலர் விலகி உள்ளோம் என தெரிவித்துள்ளனர்.
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!