தமிழகம் முழுவதும் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கும் பணி தொடக்கம்!

 
ரேஷன்

 தமிழகம் முழுவதும் புதிய ரேஷன் கார்டு வழங்கும் பணிகள் கடந்த ஓராண்டுக்கும் மேலாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. மகளிர் உரிமைத் திட்டம், தேர்தல் என அடுத்தடுத்த காரணங்களால் இவை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது விண்ணப்பித்த அனைவருக்கும்   புதிய ரேஷன் அட்டைகள்  வழங்கப்பட்டு வருகின்றன. இதனைப் பெறுவதற்கு தமிழகம் முழுவதும் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பித்திருந்தனர்.

ரேஷன்

 இந்நிலையில் புதிய ரேஷன் அட்டைகள் வழங்குவது தொடர்பாக தற்போது அமைச்சர் சக்கரபாணி ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.அதன்படி  தமிழகத்தில் புதிய ரேஷன் அட்டைகள் வழங்குவதில் எந்தவித தாமதமும் இல்லை. திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு 15.94 லட்சம் பேருக்கு புதிய ரேஷன் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது.  அதன் பிறகு புதிதாக ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்தவர்களில் 24,657 விண்ணப்பங்களுக்கு அச்சடிக்கப்பட்ட ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளது .

ரேஷன்

 மீதமுள்ளவர்களுக்கு ஸ்மார்ட் கார்டுகள் அச்சடிக்கும் பணி நடைபெற்று வருகிறது என விளக்கம் அளித்துள்ளார்.   மேலும் மின்னணு ஸ்மார்ட் கார்டுகள் அச்சடிக்கும் பணி நடைபெற்று வருவதால் விரைவில் மீதமுள்ளவர்களுக்கும் புதிய அட்டைகள் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். இத்தகவல் ரேஷன் கார்டுகளுக்கு விண்ணப்பித்தவர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web