கள்ளக்காதலுக்கு இடையூறு... கணவனைக் கொன்றுப் புதைத்து நாடகமாடிய மனைவி!

 
கள்ளக்காதல் கள்ளக்காதல்

திருமண பந்தத்தின் புனிதத்தைக் கெடுக்கும் வகையில் அரங்கேறும் சட்டவிரோதக் கள்ளக்காதல் உறவுகள், தற்பொழுது தொடர்ச்சியான கொலைக் குற்றங்களில் முடிந்து வருவது சமுதாயத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, தெலங்கானா மாநிலத்தில் தனது கள்ளக்காதலுக்குத் தடையாக இருந்த கணவனைக் காதலனுடன் சேர்ந்து அடித்துக் கொன்று, உடலை ஜேசிபி எந்திரம் மூலம் குழிதோண்டிப் புதைத்த செவிலியர் மற்றும் அவரது காதலனைப் போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.

தெலங்கானா மாநிலம் கங்காபூர் பகுதியைச் சேர்ந்தவர் முத்யம் ரெட்டி. இவருடைய மனைவி கல்பனா, அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றி வருகிறார். இவருக்குச் சிண்டு என்ற வாலிபருடன் நீண்ட நாட்களாகச் சட்டவிரோதக் கள்ளக்காதல் உறவு இருந்து வந்துள்ளது. இவர்களது தனிமை விவகாரம் கணவர் முத்யம் ரெட்டிக்குத் தெரியவந்ததை அடுத்து, அவர் தனது மனைவியைக் கடுமையாகக் கண்டித்துள்ளார். இதனால் தங்களது கள்ளக்காதல் உறவுக்கு முத்யம் ரெட்டி பெரும் இடையூறாக இருப்பதை உணர்ந்த கல்பனா, அவரைத் தீர்த்துக்கட்டத் திட்டமிட்டார்.

பலாத்காரம் காதல் கள்ளக்காதல்

இதனையடுத்து, திட்டமிட்டபடி கல்பனா தனது காதலன் சிண்டுவுடன் இணைந்து முத்யம் ரெட்டியை வீட்டில் வைத்து மிகக் கொடூரமாக அடித்துக் கொலை செய்தார். பின்னர், எவருக்கும் சந்தேகம் வராதவாறு நள்ளிரவில் ஜேசிபி எந்திரம் ஒன்றைப் வாடகைக்கு எடுத்து வந்து, ஆள் நடமாட்டமில்லாத பகுதியில் ஆழமான குழி தோண்டி முத்யம் ரெட்டியின் உடலைப் புதைத்து மறைத்துள்ளனர்.

அதன் பின்னர், தனது கணவரைக் கடந்த சில நாட்களாகக் காணவில்லை என்று கல்பனா காவல் நிலையத்தில் புகார் அளித்து எவ்வித குற்ற உணர்ச்சியுமின்றி நாடகமாடி வந்துள்ளார். எனினும், கல்பனாவின் முன்னுக்குப் பின் முரணான பதில்களால் சந்தேகமடைந்த போலீஸார், அவரது மொபைல் போன் அழைப்புகளை ஆய்வு செய்தபோது கள்ளக்காதல் விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது.

கள்ளக்காதல்

போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில், கல்பனா மற்றும் அவரது காதலன் சிண்டு ஆகிய இருவரும் இணைந்து முத்யம் ரெட்டியைக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து இருவர் மீதும் கொலை வழக்குப் பதிவு செய்த போலீசார் அவர்களைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். பெற்ற தந்தை கொலையுண்டும், தாய் சிறைக்கும் சென்றதால் அனாதையாக நின்ற இவர்களின் இரண்டு பிஞ்சு குழந்தைகளும் தற்பொழுது பாதுகாப்பு கருதி அவர்களின் பாட்டியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.