உப்பள தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ்... பேச்சுவார்த்தையில் உடன்பாடு!

 
உப்பள தொழிலாளர்கள்

தூத்துக்குடியில் உப்பள தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்குவது தொடர்பாக பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்பட்டது. 

தூத்துக்குடியில் உப்பள தொழிலாளர்களுக்கு 2025 ஆம் ஆண்டு தீபாவளி போனஸ் வழங்குவது சம்பந்தமாக உப்பு உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிற்சங்க  நிர்வாகிகளுக்கு இடையே  பேச்சுவார்த்தை உப்பு சங்க அலுவலகத்தில் சிறிய அளவு உப்பு உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் சந்திர மேனன் தலைமையில் நடைபெற்றது. 

தூத்துக்குடியில் உப்பு உற்பத்தியில் தட்டுப்பாடு! விலை உயரும் அபாயம்!

செயலாளர் விஜயசேகர் முன்னாள் செயலாளர் ஏ.ஆர்.ஏ.எஸ். தனபாலன் உப்பு உற்பத்தியாளர்கள் ஸ்ரீகாந்த், லட்சுமணன், மற்றும் தொழிற்சங்க சார்பில் திமுக சார்பில் பாலசுப்பிரமணியன், மாடசாமி, சி.ஐ.டி.யு சார்பில் பொன்ராஜ். ஐ.என்.டி.யு.சி. சிறுபான்மை பிரிவு சார்பில் பாக்யராஜ், அ.தி.மு.க. சார்பில் குருசாமி, அருணா, ஏ.ஐ.டி.யு.சி. சார்பில் பரமசிவம், ஐ.என்.டி.யு.சி. சார்பில் ராஜு உள்பட7 தொழிற்சங்கங்கள் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர்

தூத்துக்குடியில் உப்பு உற்பத்தியில் தட்டுப்பாடு! விலை உயரும் அபாயம்!

பேச்சுவார்த்தையின் முடிவில் ஆண்டுதோறும் முழுமையாக வேலைக்கு வந்த ஆண் தொழிலாளர்களுக்கு ரூ.10,000, பெண் தொழிலாளர்களுக்கு 9,675 ஆண்டுக்கு 9 நாள் விடுமுறை சம்பளமாக ஆண்களுக்கு 5400, 5310 பெண்களுக்கு மற்றும் காலணி கையுறை வாங்க ரூ.400 வழங்குவது என்றும், இந்த பணத்தை வருகிற 16-ம் தேதிக்குள் வழங்க வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?