கூட்டுறவு சங்கப் பணியாளர்களுக்கு 20% தீபாவளி போனஸ்!

 
தமிழ்நாடு அரசு
 

தமிழ்நாட்டில் கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு அதிகபட்சமாக 20 சதவீதம் தீபாவளி போனஸ் வழங்கப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் மாநிலம் முழுவதும் உள்ள 44,081 பணியாளர்களுக்கு மொத்தம் ரூ.44 கோடியே 11 லட்சம் போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படவுள்ளது.

அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், 2024–2025 ஆண்டுக்கான மிகை ஊதியம் (போனஸ்) மற்றும் கருணைத் தொகை 2025–2026 ஆம் ஆண்டில் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. உபரித் தொகை உள்ள கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 20 சதவீதம் வரை போனஸ் வழங்கப்படும். உபரி தொகை இல்லாத சங்கங்களின் பணியாளர்களுக்கு 10 சதவீதம் போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும்.

தமிழ்நாடு அரசு

மேலும், நிகர இலாபம் ஈட்டாத தலைமை மற்றும் மத்திய சங்கங்களில் பணிபுரிபவர்களுக்கு ரூ.3,000 மற்றும் தொடக்க சங்கங்களில் பணிபுரிபவர்களுக்கு ரூ.2,400 கருணைத் தொகையாக வழங்கப்படும். இந்த நடவடிக்கை, பணியாளர்களின் உற்சாகத்தை உயர்த்தி, தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாட வழிவகுக்கும் என அரசு தெரிவித்துள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?