வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாட்டம்... ட்ரம்ப் குத்துவிளக்கு ஏற்றி வாழ்த்து!
நாடு முழுவதும் நேற்று முன்தினம் தீபாவளி பண்டிகை உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு பல்வேறு நாடுகளின் தலைவர்கள் இந்திய மக்களுக்கு தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்தனர்.

இந்நிலையில், அமெரிக்காவின் வெள்ளை மாளிகையிலும் தீபாவளி பண்டிகை சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. வெள்ளை மாளிகையில் நடைபெற்ற விழாவில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் பாரம்பரிய முறையில் குத்துவிளக்கு ஏற்றி தீபாவளியை கொண்டாடினார்.

இந்த நிகழ்ச்சியில் அமெரிக்க உளவு அமைப்பின் (FBI) தலைவர் காஷ் படேல், தேசிய புலனாய்வு பிரிவு தலைவர் துளசி கப்பார்ட், அமெரிக்காவுக்கான இந்திய தூதர் வினய் மோகன் உள்ளிட்ட பல முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர்
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
