தீபாவளி கொண்டாட்டம் | இரவு 12 மணி வரை நீட்டிப்பு... 3.5 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரயில்!

 
மெட்ரோ ரயில் நிலையங்களில் மினி பஸ் சேவை: மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்
நாடு முழுவதும் தீபாவளி கொண்டாட்டங்கள் களைக்கட்ட துவங்கியுள்ள நிலையில், பலரும் இந்த தொடர் விடுமுறை தினங்களை உறவினர்களுடன் சேர்ந்துக் கொண்டாட சொந்த ஊர் நோக்கி பயணப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், பொதுமக்களின் வசதிக்காக கூட்ட நெரிசலைத் தவிர்க்க சென்னையில் 3.5 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்கப்படும் எனவும், தீபாவளிக் கொண்டாட்டங்களை மனதில் கொண்டு, ஷாப்பிங் செல்லும் மக்களின் வசதிக்காகவும், நண்பர்கள், உறவினர்களைப் பார்க்க செல்பவர்களுக்காகவும் இரவு 12 மணி வரை மெட்ரோ ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மெட்ரோ

தீபாவளி பண்டிகையை குடும்பத்தினருடனும், உறவினர்களுடனும் கொண்டாடும் வகையில் சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்களில் ஏராளமானோர் சொந்த ஊர் நோக்கி பயணப்பட்டு வருகின்றனர். சென்னையில் தீபாவளி ஷாப்பிங்கும் களைக்கட்ட துவங்கி இருக்கிறது. இந்நிலையில், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் பொதுமக்களின் வசதிக்காக 3.5 நிமிடங்களில் ஒரு மெட்ரோ ரயில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

மெட்ரோ ரயில்

தற்போது 2 வழித்தடங்களில் 6 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வரும் நிலையில், பயணிகளின் வருகைக்கு ஏற்ப கூடுதலாகவும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

From around the web