தீபாவளி பலகாரங்கள் | ஈஸியா செய்யலாம் தேன்குழல் முறுக்கு!
சில வழிமுறைகளை கடைப்பிடித்திட மிக சுலபமாக வீட்டிலேயே வெள்ளை வெளேரென்ற தேன்குழல் முறுக்கை அட்டகாசமாக செய்து அசத்தி விடலாம்.
இதில் மிக முக்கியமானது மாவு தான். பச்சரிசியை சுத்தம் செய்து கழுவி ஊற வைத்து நன்றாக வெயிலில் காய வைக்கவேண்டும். ஈரப்பதம் கொஞ்சமும் இல்லாமல் பட்டுப்போல் காய வைக்க வேண்டியதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
மிஷினில் அரைக்க கொடுக்கும் போது முதலில் வீட்டுக்கு அரைக்கிலோ அரிசியை அரைத்துவிட்டு இதை போட்டு வாங்கிக் கொள்ள வேண்டியது மிக முக்கியம். அப்போது தான் தேன்குழல் முறுக்கு வெள்ளை நிறத்தில் வரும்.
தேவையான பொருட்கள்
மாவு பச்சரிசி – 400கி
உளுந்து – 100கி
வெண்ணெய் – சிறிதளவு
கறுப்பு எள் – 1 டீஸ்பூன்
சீரகம் – 1/2 ஸ்பூன்
பெருங்காயம்- 1சிட்டிகை
உப்பு -தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை
பச்சரிவு மாவு மேற்சொன்ன பதத்தில் தயார் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும். அத்துடன் உளுந்தை வெறும் கடாயில் வாசம் வரும் வரை வறுக்க வேண்டும். நன்றாக ஆற வைத்து மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
அரிசி மாவையும், உளுந்து மாவையும் நன்றாக கலந்து விட வேண்டும். இதில் தேவையான அளவு உப்பு, வெண்ணெய் , எள்ளு, சீரகம், பெருங்காயம் சேர்த்து கைகளால் கலந்து விட வேண்டும். சிறிது சிறிதாக தண்ணீரைத் தெளித்து முறுக்கு மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
தேன்குழல் அச்சில் போட்டு ஜல்லிக்கரண்டி மேல் லேசாக எண்ணெயைத் தடவி முறுக்கை பிழிந்து, எண்ணெய் சட்டியில் விட வேண்டும் . எண்ணெய் மிதமான தீயில் இருக்க வேண்டியது அவசியம். எண்ணெயில் சலசலப்பு அடங்கியதும் வெள்ளை நிறத்தில் இருக்கும் போதே, வெளியே எடுத்து விட வேண்டும். ஆற விட்டு சாப்பிட அசத்தலான சுவையில் வெள்ளை வெளேரென்று வீட்டு தேன்குழல் முறுக்கு தயார்
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!