தீபாவளி பலகாரங்கள் | கமகமக்கும் அதிரசம்.. ஈஸியான ரெஸிப்பி!
காரணம் அதிரசம் என்றதும் மிகவும் கஷ்டமான வேலை . பாகு சரியாக செய்யவில்லை என்றால் அதிரசமே வராது என்ற பல சந்தேகங்கள் கேள்விகள். பொருட்களை சரியான விகிதத்தில் பயன்படுத்தினால், அதிரசம் செய்வது மிகமிக சுலபம்.
தேவையானப் பொருட்கள்
பச்சரிசி – 1 கப்
வெல்லம் – 3/4 கப்
ஏலக்காய்தூள் – 1சிட்டிகை
நல்லெண்ணெய் – சிறிதளவு
ஒரே கப்பை வைத்து அளக்க வேண்டியது அவசியம்.
செய்முறை
ஒரு கப் பச்சரிசியை 2 மணி நேரம் ஊற வைக்கவும். அரிசியினை 10 நிமிடம் காய வைக்கவும். அரிசி சற்று ஈரப்பதமாக இருக்க வேண்டியது அவசியம். இப்போது இந்த அரிசியினை மிக்சியில் போட்டு அரைத்து சலித்துக் கொள்ளவும்.
3/4 கப் வெல்லத்தில் 1/4 கப் தண்ணீர் ஊற்றி வெல்ல பாகு தயாரிக்க வேண்டும். அரைத்து வைத்துள்ள பச்சரிசி மாவில் ஏலக்காய் தூளை சேர்த்துக் கொள்ள வேண்டும்.வெல்லப்பாகு சூடாக இருக்கும் போதே பச்சரிசி மாவில் ஊற்றி கிளற வேண்டும்.
மாவு மீது சிறிதளவு நல்லெண்ணெய் ஊற்றி ஆறவிட்டு 2 அல்லது 3 நாட்கள் மூடி வைக்க வேண்டும். இப்போது அதிரசமாவு சரியான பதத்தில் தயாராக இருக்கும். இந்த மாவினை வட்டமாக தட்டி மிதமான சூட்டில் உள்ள எண்ணெயில் பொரித்து எடுக்க சுவையும் , மணமும் வீட்டையே நிறைக்கும்.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!