திமுக எம்எல்ஏ வீட்டு வாசலில் தீக்குளித்த திமுக நிர்வாகி மரணம்... தொண்டர்கள் அதிர்ச்சி!

 
தளபதி

 தமிழகத்தில் மதுரை மாவட்டம் மூலக்கரை பகுதியில் வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திமுக  தளபதி. இவருடைய வீட்டின் முன்பாக நேற்று திமுக  நிர்வாகி கணேசன் என்பவர் திடீரென  தீக்குளித்தார். அங்கிருந்தவர்கள் அடித்துபிடித்து தீயை அணைத்து  மீட்டு 90% காயங்களுடன்  மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில்   இன்று காலை அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அவர் எதற்காக தீக்குளித்தார் என்ற காரணம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர  விசாரணை நடத்தி வருகின்றனர்.  மேலும் இச்சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன்  திமுக கட்சித் தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆம்புலன்ஸ்

காலை சுமார் 8 மணியளவில் மானகிரி பகுதியைச் சேர்ந்த ஆவின் திமுக தொழிற்சங்க நிர்வாகி கணேசன் என்பவர் எம்எல்ஏ. தளபதியின் வீட்டுக்கு வந்துள்ளார்.  பின் திடீரென எம்.எல்.ஏ., வீட்டு வாசலில் நின்றபடியே தனது உடலில் மண்ணெண்ணெயை ஊற்றிக் கொண்டு தீக்குளித்தார். அருகில் இருந்தவர்கள் கண் இமைக்கும் நேரத்தில் நிகழ்ந்த இந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்து உடனடியாக ஓடிச் சென்று அவரைத் தடுத்து நிறுத்தி, தீயை அணைத்தனர். எனினும், அவரது கை, கால்களில் தீக்காயங்கள் ஏற்பட்டன. பின்னர் அவரை மீட்டு, திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். 

தளபதி

இது குறித்து விசாரித்து வரும் திருப்பரங்குன்றம் போலீசாரின் முதற்கட்ட  விசாரணையில், கட்சியின் பெயரைச் சொல்லி நிர்வாகிகள் சிலர் ரூ. 3 கோடி வரை நிதி வசூலித்து மோசடி செய்துள்ளனர். இது பற்றி பல முறை புகார் அளித்தும் முறையான விசாரணை நடவடிக்கை இல்லை என்பதால், நானும் கலைஞருடன் சேரப்போகிறேன் எனக்கூறி அவர் தீக்குளித்ததாக தெரிய வந்துள்ளது. இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து திருப்பரங்குன்றம் போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web