திமுக பொறியாளர் அணியில் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு.. எப்படி விண்ணப்பிப்பது?
தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தில் நகர, ஒன்றிய, பகுதி, பேரூர், கழக அளவில் திமுக பொறியாளர் அணி பொறுப்புகளுக்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று வடக்கு மாவட்டச் செயலாளர் அமைச்சர் பி.கீதா ஜீவன் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "திமுகழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க கழக ஒருங்கிணைப்புக் குழு ஆய்வுக் கூட்டத்தில் மாநில இளைஞரணிச் செயலாளர், உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில், தி.மு.கழக பொறியாளர் அணியின் நகர, ஒன்றிய, பகுதி, பேரூர் கழக அளவில் பொறியாளர் அணிக்கு நிர்வாகிகளை விண்ணப்பம் மூலம் தேர்வு செய்திட கழக பொறியாளர் அணிச் செயலாளர் எஸ்.கே.பி. கருணா அறிவித்துள்ளார்.
அவரது அறிவிப்புக்கு இணங்க தூத்துக்குடி வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட நகர ஒன்றிய, பகுதி, பேரூர் கழக அளவில் பொறியாளர் அணி நிர்வாகிள் பொறுப்புக்கு விருப்பமுள்ளவர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பம் செய்திட வேண்டும்.
அதற்கென பிரத்யோக QR CODE உருவாக்கப்பட்டுள்ளது. இந்த QR CODE -ஆனது தூத்துக்குடி வடக்கு மாவட்ட கழக அலுவலகத்திலும், அந்தந்த நகர, ஒன்றிய, பகுதி, பேரூர் கழக அலுவலகங்களிலும் உள்ளது.
நகரம், ஒன்றியம், பகுதி, பேரூர் கழக அளவில் பொறியாளர் அணி அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர் பதவிக்கு பொறியியல் அல்லது டிப்ளமோ படித்திருக்க வேண்டும். பொறியியல் அல்லது பட்டயபடிப்பு (டிப்ளமோ) கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் ஆண்கள், பெண்கள் இருவரும் விண்ணப்பம் செய்யலாம். நகர, ஒன்றிய, பகுதி, பேரூர்க் கழக அளவில் பொறியாளர் அணி அமைப்பாளர் ஒருவரும், துணை அமைப்பாளர்களாக பேரும் தேர்வு செய்யப்படுவார்கள்.
மேற்கண்ட விதிமுறைகளின்படி நடைபெறும் பொறியாளர் அணி நிர்வாகிகளுக்கான பொறுப்புகளுக்கு சம்பந்தப்பட்ட நகர, ஒன்றிய, பகுதி, பேரூர் கழகங்களுக்கு உட்பட்ட பொறியாளரணி தோழர்கள் விண்ணப்பம் செய்திடவும், அதற்கான ஏற்பாடுகளை சம்பந்தப்பட்ட நகர, ஒன்றிய, பகுதி, பேரூர்க் கழகச் செயலாளர்கள் செய்திடவும் கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!