சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஜனவரி 10ம் தேதி திமுக மாணவர் அணி கூட்டம்!
சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் திமுக மாணவர் அணி மாவட்ட, மாநில அமைப்பாளர்கள் கூட்டம் வருகிற ஜனவரி 10ம் தேதி நடைபெறும் என திமுக மாணவர் அணி செயலாளர் எழிலரசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக திமுக மாணவர் அணிச் செயலாளர் எழிலரசன் எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக மாணவர் அணியின் மாவட்ட, மாநகர, மாநில அமைப்பாளர்கள் கூட்டம், வருகிற ஜனவரி 10ம் தேதி வெள்ளிக்கிழமை, மாலை 4.30 மணியளவில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் எனது தலைமையில் மாநில மாணவர் அணித் தலைவர் இரா.ராஜீவ்காந்தி - இணைச் செயலாளர்கள் சி. ஜெரால்டு, எஸ். மோகன் மற்றும் துணைச் செயலாளர்கள் மன்னை த. சோழராஜன், சேலம் ரா. தமிழரசன், அதலை பி. செந்தில்குமார், கா. அமுதரசன், பி.எம். ஆனந்த், கா. பொன்ராஜ், வி.ஜி. கோகுல், திருமதி பூர்ணசங்கீதா, திருமதி ஜெ. வீரமணி ஆகியோர் முன்னிலையில் நடைபெற உள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!