தமிழகம் முழுவதும் நவம்பர் 11ம் தேதி திமுக கூட்டணி போராட்டம்!

 
திமுக

இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் சீராய்வு (SIR) திட்டத்திற்கு எதிர்த்து, தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சிகள் நவம்பர் 11-ம் தேதி மாநிலம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளன.

இந்த திட்டம் மூலம் தகுதியுள்ள வாக்காளர்களை நீக்கி, தகுதியற்றவர்களை சேர்க்கும் சூழல் உருவாகும் அபாயம் இருப்பதாக கூட்டணி கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. மேலும், இந்திய தேர்தல் ஆணையம் மத்திய அரசின் அழுத்தத்தில் செயல்படுகிறது என்றும், இது ஜனநாயகத்தை பாதிக்கும் செயலாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 திமுக

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் காணும் நிலையில், பெரும்பாலான மக்கள் விவசாயப் பணிகளில் ஈடுபடுவதை கருத்தில் கொள்ளாமல் கணக்கீட்டு படிவத்தை நிரப்பச் சொல்லப்படுவது வாக்காளர்களின் உரிமையைச் சுருக்கும் நடவடிக்கை என கூட்டணி கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. திருப்பூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் ஒரே நாளில் படிவம் நிறைவேற்றுமாறு வாக்குச்சாவடி அலுவலர்கள் அழுத்தம் கொடுப்பதாகவும், வாக்காளர் பட்டியலில் குழப்பம் நீங்காத நிலை உள்ளது என்றும் கூட்டணி விளக்கியுள்ளது.

இதனை கண்டித்து, வருகிற 11-ம் தேதி காலை 10 மணிக்கு தமிழகத்தின் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

திமுக

இந்த கூட்டு அறிக்கையில் தி.மு.க பொறுளாளர் டி.ஆர். பாலு, திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி, காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை, வைகோ, பெ. சண்முகம், மு. வீரபாண்டியன், கே. எம். காதர்மொகிதீன், தொல். திருமாவளவன் உள்ளிட்ட கூட்டணி தலைவர்கள் கையொப்பமிட்டுள்ளனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க