பிப்ரவரி 7ம் தேதி தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்!

தேமுதிக தலைமை கழகம் 25வது ஆண்டு கொடி நாள் விழாவை முன்னிட்டு பிப்ரவரி 7ம் தேதி மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளது.
இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “ தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின், மாவட்ட கழக செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் கழக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் பிப்ரவரி 7ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை கழகத்தில் நடைபெறவுள்ளது.
பிப்ரவரி 12ம் தேதி 25 வது ஆண்டு கொடி நாள் விழாவை முன்னிட்டு முக்கிய ஆலோசனை மற்றும் கழகத்தின் வளர்ச்சிக்காக பல்வேறு முக்கிய ஆலோசனைகள் நடத்தப்பட உள்ளது. எனவே அனைத்து மாவட்ட கழக செயலாளர்கள் அனைவரும் கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!