கத்துக்குத்து பட்ட மருத்துவர் பாலாஜி வீடு திரும்பினார்!
சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு ஆஸ்பத்திரியில் புற்றுநோய் சிகிச்சை பிரிவில் சிறப்பு மருத்துவர் பாலாஜி. 53 வயதாகும் இவர் கடந்த சில நாட்களுக்கு முன் நோயாளியின் மகனால் மருத்துவமனையில் கத்தியால் குத்தி தாக்கப்பட்டார். தன்னுடைய தாயாருக்கு சரியாகச் சிகிச்சை அளிக்கவில்லை என விக்னேஷ் என்ற இளைஞர் இந்த வெறிச்செயலில் ஈடுபட்டதாகத் தெரிகிறது.
அவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள். கத்திக்குத்தில் காயமடைந்த மருத்துவர் பாலாஜி அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இது குறித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இருவரும் நேரில் சென்று மருத்துவர் பாலாஜியின் உடல்நலம் பற்றி கேட்டறிந்தனர்.
இதையடுத்து டாக்டர் பாலாஜி நலமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.இந்நிலையில், கத்திக்குத்தால் காயமடைந்த டாக்டர் பாலாஜி, கிண்டி மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து இன்று வீடு திரும்பியதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது. மருத்துவர் பாலாஜியை சில நாட்கள் வீட்டில் ஓய்வெடுக்கும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!