“கடவுள் இருக்காரா குமாரு? சாத்தான் என்பவர் யார்?” பள்ளி மாணவர்களிடம் கேட்கப்பட்ட கேள்விகளால் பெற்றோர்கள் அதிர்ச்சி!
அமெரிக்காவின் ஓக்லஹாமா மாகாணத்தில் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. அங்கு படிக்கும் மாணவர்களுக்கு சமூக அறிவியலில் வீட்டுப்பாடம் செய்ய பணி வழங்கப்பட்டது. அசைன்மெண்டில் சரியான விளக்கத்துடன் ஆராய்ந்து பதிலளிக்க சில கேள்விகள் வழங்கப்பட்டது. அதில் கேட்கப்பட்ட கேள்விகளை பார்த்து மாணவர்களின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். ஒரு மாணவியின் தாய் இது குறித்து மாணவர்களிடம் கேட்கப்பட்ட கேள்விகளை அவரது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறார்.
இதில் உள்ள கேள்விகள்: உலகம் எப்படி உருவானது? அதை உருவாக்கியவர் யார்? எப்போது தீமை தோன்றியது? அது இன்னும் இருக்கிறதா? ஒழுக்கம் என்றால் என்ன? மதம் என்றால் என்ன? கிறிஸ்தவம் என்றால் என்ன? கிறிஸ்தவனாக இருப்பதன் அர்த்தம் என்ன? கடவுள் இருக்கிறாரா? இல்லையா? சாத்தான் இருப்பது உண்மையா? மக்கள் அதை நல்லதா அல்லது கெட்டதா அல்லது இரண்டுக்காக ஏற்றுக் கொண்டார்களா? போன்ற 10 கேள்விகள் கேட்கப்பட்டன.
ஓக்லஹாமாவில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் அசைன்மெண்டில் உலக வரலாற்றில் கேட்கப்படும் கேள்விகள் குறித்து பதிவிட்டுள்ளார். அவரது பதிவை பார்த்த சமூக வலைதளவாசிகள் பள்ளியையும், கேட்கப்பட்ட கேள்விகளையும் விமர்சித்து வருகின்றனர். சமூக வலைத்தளங்களில் இது பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கும் நிலையில், இந்த கேள்விகள் அனைத்தும் மறு ஆய்வு செய்யப்படும் என்று பள்ளி நிர்வாகம் அதே சமூக வலைத்தள பக்கத்தில் தெளிவுபடுத்தியுள்ளது.
ஆவணி மாத சிறப்புக்கள் , வழிபாடுகள், பண்டிகைகள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா