நாய், பூனை வளர்ப்பவர்களே உஷார்... செல்லப் பிராணி உரிமம் கட்டாயம்!
சென்னை மாநகராட்சிப் பகுதிக்குள் நாய் உள்ளிட்ட செல்லப் பிராணிகளை வளர்க்க உரிமம் பெறுவது இனி கட்டாயமாகியுள்ளது. உரிமம் பெறாதவர்கள் மீது ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் என வியாழக்கிழமை நடைபெற்ற மாநகர மாமன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேயர் ஆர். பிரியா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் துணை மேயர் மு. மகேஷ்குமார், ஆணையர் ஜெ. குமரகுருபரன், மண்டலத் தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். மொத்தம் 72 தீர்மானங்கள் இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

மாநகராட்சி சுகாதார மற்றும் கால்நடை மருத்துவத் துறையின் கீழ் செல்லப் பிராணி உரிமம் பெறுவதற்கான நடைமுறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக செல்லப் பிராணி வளர்ப்பவர்கள் தங்களது விவரங்களையும், பிராணியின் புகைப்படத்தையும் மாநகராட்சியின் செயலியில் பதிவேற்றி ரூ.50 கட்டணம் செலுத்த வேண்டும். ரேபீஸ் தடுப்பூசி சான்றிதழ் மற்றும் மருத்துவ பரிசோதனையின் பின்னரே உரிமம் வழங்கப்படும். அப்போது பிராணிகளுக்கு மைக்ரோச் சிப் பொருத்தப்படும்.
ஒரு மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ள நிலையில், நவம்பர் 24 முதல் அனுமதியின்றி செல்லப் பிராணிகளை வளர்ப்போர் ரூ.5,000 அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். இதற்காக சென்னையில் வளர்க்கப்படும் நாய்களுக்கு சுமார் 2 லட்சம் மைக்ரோச் சிப் பொருத்தும் பணியை தனியார் நிறுவனம் மேற்கொள்கிறது. அந்த நிறுவனம் நாய்களின் பதிவுகளை 5 ஆண்டுகள் பராமரிக்கிறது.

அதே கூட்டத்தில், எழும்பூர் பகுதியில் 66 குடும்பங்களுக்கும், அயனாவரம் கொன்னூர் பகுதியில் 38 குடும்பங்களுக்கும் வீட்டுமனைப் பட்டா வழங்குவதற்கான தடையின்மைச் சான்றிதழுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. மேலும், வணிக வளாக பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஒவ்வொரு மண்டலத்திலும் தனித்துணைக் குழுக்கள் அமைப்பதுடன், மாநகர தூய்மைப் பணியாளர்களுக்கு தினமும் மூன்று நேர உணவு வழங்குவதற்கான ஒப்பந்தமும் தனியார் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
