வளர்ப்பு நாய்க்கும், வீட்டு வேலைக்காரருக்கும் சொத்தில் பங்கு.. உயில் எழுதி வைத்த ரத்தன் டாடா!

 
ரத்தன் டாடா

இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரரான ரத்தன் டாடா வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக சமீபத்தில் காலமானார். அவருக்கு திருமணமாகவில்லை. இந்நிலையில் ரத்தன் டாடாவின் சொத்து யாருக்கு செல்லும் என்ற யூகம் நிலவி வந்த நிலையில், தற்போது அவர் உயில் எழுதியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

ரத்தன் டாடா

அதன்படி தனது 10,000 கோடி சொத்தில் தனது வளர்ப்பு நாயுக்கு பங்கு எழுதி வைத்துள்ளார். ரத்தன் டாடாவின் உடல் தகனம் செய்யப்பட்டபோது, ​​அவரது செல்ல நாய் டிட்டோ அந்த இடத்தை விட்டு வெளியேறவில்லை. இவ்வளவு அன்பு காட்டிய நாய்க்கு ரத்தன் டாடா சொத்தை எழுதி கொடுத்தது  நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரத்தன் டாடா தனது வீட்டு சமையல்காரர் ராஜன் சாஷாவிடம் இந்த ஜெர்மன் ஷெப்பர்ட்டின் பராமரிப்பை ஒப்படைத்துள்ளார். இது நாயை அதன் வாழ்நாள் முழுவதும் பராமரிக்கும் செலவை ஈடு செய்யும் வகையில் உயில் எழுதி வைத்துள்ளார்.

 ரத்தன் டாடா

அதேபோல் தன்னுடன் நீண்ட காலம் பணியாற்றிய ராஜன் பட்லருக்கும் சொத்து எழுதி கொடுத்துள்ளார். 30 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்ததால், சொத்தில் அவருக்கும் பங்கு கொடுத்துள்ளார். அதன்படி, அவரது பத்தாயிரம் கோடி மதிப்புள்ள சொத்து அவரது சகோதரர்கள், சகோதரிகள், அவரது அறக்கட்டளை, வீட்டு வேலைக்காரர்கள் மற்றும் பிறருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

From around the web