பக்தர்கள் ஏமாற்றம்... திரிவேணி சங்கமத்தில் நீராட வராதீங்க... முதல்வர் திடீர் அறிவிப்பு!

 
கும்பமேளா


 
 
உத்தரப்பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில்  ஜனவரி 13ம் தேதி  மகா கும்பமேளா தொடங்கப்பட்டு நேற்று ஜனவரி 28 ம் தேதி செவ்வாய்க்கிழமை வரை 16 நாட்களில் 15 கோடிக்கும் அதிகமான பக்தா்கள் புனித நீராடியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நேற்ற்று மட்டும் ஒரே நாளில்  4.64 கோடிக்கும் அதிகமானோா் கும்பமேளாவில் புனித நீராடியுள்ளனா்.

மௌனி அமாவாசையான இன்று ஜனவரி 29ம் தேதி  ஒரே நாளில் 10 கோடி போ்வரை புனித நீராட வர வாய்ப்புள்ளதால் மகாகும்ப நகரில் வாகனப் போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டு, விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இன்று ஒரே நாளில் 10 கோடி பக்தர்கள் கும்பமேளாவிற்கு வருகை தரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான  பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. 
இந்நிலையில், கூட்ட நெரிசலில் சிக்கி 15 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக அஞ்சப்படும் நிலையில், 30 க்கும் மேற்பட்ட பெண்கள் காயமடைந்து மத்திய மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கும்பமேளா

இச்சம்பவம் குறித்து  உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் தன்னுடைய பதிவில்  "பிரயாக்ராஜுக்கு வந்த பக்தர்கள், உங்களுக்கு அருகிலுள்ள கங்கை ஆற்றில் நீராடுங்கள். திரிவேணி சங்கமம் நோக்கிச் செல்ல முயற்சிக்காதீர்கள். நீங்கள் அனைவரும் நிர்வாகத்தின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி ஏற்பாடுகளைச் செய்வதில் ஒத்துழைக்க வேண்டும். மேலும் எந்த வதந்திகளுக்கும் கவனம் செலுத்த வேண்டாம்" எனப் பதிவிட்டுள்ளார்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க

From around the web