காதல் திருமணம்... கலெக்டர் அலுவலக வாசலில் இளம்பெண் தீக்குளிக்க முயற்சி!
இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். தங்கமணி ரயில்வேயில் ஒப்பந்ததாரராக பணிபுரிந்து வருகிறார்.இந்நிலையில்
அஞ்சலி தனது தந்தை மாதேசுடன், கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அப்போது, மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணையை எடுத்து, இருவரும் தலையில் ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயற்சி செய்தனர்.
உடனடியாக அந்த பகுதியில் பாதுகாப்பிற்கு நின்றிருந்த போலீசார், மண்ணெண்ணை கேனை பறிமுதல் செய்து தீவிர விசாரணை செய்தனர். இது குறித்து அஞ்சலி கூறுகையில், 'நானும், தங்கமணியும் பெற்றோரை எதிர்த்து, காதல் திருமணம் செய்து கொண்டோம். இதனால் எங்களது திருமணத்திற்கு எந்த சீர்வரிசையும் எனது பெற்றோர் செய்யவில்லை.
இந்நிலையில், எனது கணவர், அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள், வரதட்சணை கேட்டு என்னையும், எனது குழந்தைகளையும் அடித்து துன்புறுத்தி வருகின்றனர். இது குறித்து ஏற்கனவே காவல்துறையில் புகார் அளித்து இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே, வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வரும் எனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனக் கூறியுள்ளார். இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!