இந்த நாடுகளுக்கு போகாதீங்க!! அமெரிக்கா எச்சரிக்கை!!

 
இந்த நாடுகளுக்கு போகாதீங்க!! அமெரிக்கா எச்சரிக்கை!!


உலகம் முழுவதும் கொரோனா மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. பல நாடுகளில் தடுப்பூசிகள் மூலம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால் ஐரோப்பாவில் நான்காவது அலை தொடங்கியுள்ளது. குறிப்பாக இங்கிலாந்து, ஜெர்மனி, ரஷியா, ஹங்கேரி, நெதர்லாந்து நாடுகளில் தினசரி கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது.

இந்த நாடுகளுக்கு போகாதீங்க!! அமெரிக்கா எச்சரிக்கை!!


இதனையடுத்து ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்வதை தவிருங்கள் என உலக நாடுகள் தங்களது குடிமக்களை வலியுறுத்தி வருகின்றன. அந்த வகையில் வல்லரசு நாடான அமெரிக்கா தனது நாட்டு குடிமக்களுக்கு வெளி நாடுகளுக்கு பயணம் செய்வது குறித்த அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது. அதில் கொரோனா பாதிப்பை நான்கு பிரிவுகளாக பிரித்துள்ளது.

இந்த நாடுகளுக்கு போகாதீங்க!! அமெரிக்கா எச்சரிக்கை!!


இதில் 4 வது பிரிவில் மிகவும் மோசமான பாதிப்புக்களை கொண்ட நாடுகளாக பிரிட்டன், பெல்ஜியம், கிரீஸ், நார்வே, சுவிட்சர்லாந்து, அயர்லாந்து, செக் குடியரசு, ருமேனியா , ஜெர்மனி, டென்மார்க் நாடுகள் உள்ளன. இந்நாடுகளுக்கு அமெரிக்கர்கள் பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்று அந்நாட்டு நோய் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இந்த நாடுகளுக்கு போகாதீங்க!! அமெரிக்கா எச்சரிக்கை!!


இந்நிலையில் ஐரோப்பிய நாடுகளில் 4 வது அலை குறித்து உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.இதிலிருந்து மக்களை காக்கவும், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் இன்னும் கடுமையாக உழைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது.

From around the web