மிஸ் பண்ணாதீங்க... நினைத்த காரியத்தை வெற்றியடைய செய்யும் வியாழக்கிழமை வழிபாடு!!

வியாழக்கிழமை குருவிற்கான நாள். கற்றல் சம்பந்தமான காரியங்களைத் துவங்க வியாழக்கிழமையைத் தேர்ந்தெடுத்தால் மனதில் பதியும். கல்வி வசப்படும். வியாழக்கிழமை வழிபாடு என்றாலே நம்மில் பலரும் நவகிரக சன்னதிக்கு சென்று குரு பகவானை வழிபடுகிறோம். ஆனால் வியாழக்கிழமை தினத்தில் தட்சிணாமூர்த்தியை வழிபட மறந்து விடுகிறோம்.
ஞானத்துக்கு அதிபதி இவர் தான். சிவபெருமானின் யோக வடிவம் தான் இந்த தட்சிணாமூர்த்தி. பிறைசூடிய தெய்வங்கள் அனைத்துமே சிவபெருமானை பிரதிபலிப்பவை தான் என்கின்றன ஆகம விதிமுறைகள். வியாழக்கிழமைகளில் வழிபட வேண்டியவரும் இவர் தான்.
சிவ வழிபாட்டில் வரும் தடைகளும், இடையூறுகளும் மனதை பாதிக்கும். தடைகளை களைந்து இடையூறுகளை ஒதுக்கி தள்ளி சிவ வழிபாடு முழுமை பெற இரண்டு சிவ வடிவங்களின் அருள் மிக மிக அவசியம்.
இவற்றில் முதல் வடிவமாக சொல்லப்படுவது அமைதியே உருவான தென்முகக்கடவுளான தட்சணாமூர்த்தி ரூபம். கடைசி வடிவமாக வழிபடப் படும் சிவ வடிவம் பைரவர். இந்த இரண்டு சிவ வடிவங்களின் துணையோடு தான் சிவனை வழிபட வேண்டும். அந்த வகையில் பெரும்பாலும் அனைத்து சிவ ஆலயங்களிலும் தட்சணாமூர்த்தி மற்றும் பைரவர் ஆகிய இரு சிவ வடிவங்களும் தனித்தனி சந்நிதி கொண்டு அருள்பாலிப்பர்.
தட்சணாமூர்த்தி மற்றும் பைரவர் இரு வடிவங்களும் தமது தலையில் மூன்றாம் பிறையை சூடியவர்கள். ஞானகுரு என்றழைக்கப்படும் தட்சணாமூர்த்தி அமைதியே உருவானவர். சிவ வடிவங்களில் மிகவும் சிறப்பு வாய்ந்தவர். இவரை வழிபடும் முறைகள் மிக மிக எளிது.
இவரை தொடர்ந்து வழிபட ஞானமும், செல்வமும், வெற்றியும் வந்து சேரும். கர்மவினைகள் படிப்படியாக நீங்கி மனம் அமைதி பெறும். எண்ணிய யாவும் ஈடேறும். ஞானகுருவாம் தட்சிணாமூர்த்தியை வியாழக்கிழமைகளில் வழிபாடு செய்வோம். வாழ்வில் வெற்றியையும், மனதில் அமைதியையும் பெறுவோம்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!