பைக், கார் ரேஸில் ஈடுபட்டாலோ, நடத்தினாலோ கடும் நடவடிக்கை... காவல்துறை எச்சரிக்கை!!

 
பைக் ரேஸ்

தமிழகம் முழுவதும் பொங்கல் கொண்டாட்டங்கள் களைக்கட்டி வரும் நிலையில், பல இடங்களில் ஜல்லிக்கட்டு, உறியடி, வழுக்குமரம் என்று ஒரு பக்கம் பாரம்பரிய விளையாட்டுக்கள் நடைபெற்று வருகின்றன. இன்னொரு புறம் பைக், கார் ரேஸில் இளைஞர்கள் ஈடுபட்டு வருகின்றனர். 

பைக் சாகசம்

இந்நிலையில் விழுப்புரம் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “விழுப்புரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில்  யாரும் வாகன ரேஸில் ஈடுபடவோ, நடத்தவோ கூடாது. 

பைக் ரேஸ்

பொங்கல் பண்டிகையை ஒட்டி விழுப்புரம் ஜானகிபுரம் புறவழிச் சாலை, எல்லீஸ்ச்சத்திரம் புறவழிச்சாலை, அண்ணாமலை ஓட்டல் புறவழிச்சாலை மற்றும் தேசிய நெடுஞ்சாலை உட்பட  விழுப்புரம் மாவட்டத்திற்கு உட்பட்ட எப்பகுதிகளிலும் யாரும் வாகன ரேஸில் ஈடுபடுவதோ நடத்துவதோ கூடாது. மீறுபவர்கள் தேசிய நெடுஞ்சாலை சட்டப்படி கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை! 

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!

From around the web