66 சதவீத பள்ளிகள் மற்றும் 60 சதவீத அங்கன்வாடி மையங்களில் குடிநீர் குழாய் இணைப்பு

 
66 சதவீத பள்ளிகள் மற்றும் 60 சதவீத அங்கன்வாடி மையங்களில் குடிநீர் குழாய் இணைப்பு

கோவிட்-19 தொற்றை முன்னிட்டு, பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள், உண்டு உறைவிட பள்ளிகளில் உள்ள குழந்தைகளுக்கு, சுத்தமான குடிநீர் விநியோகத்தை உறுதி செய்ய, இங்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கும் பிரச்சாரத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி, கடந்த 2020ம் ஆண்டு அக்டோபர் 2ம் தேதி தொடங்கினார்.

இந்த பிரச்சாரம் தொடங்கப்பட்டு 10 மாதங்களுக்கு குறைவான காலத்தில், நாடு முழுவதும் உள்ள கிராமங்களில் 6.85 லட்சம்(66 சதவீதம்) பள்ளிகள், 6.80 லட்சம்(60%) அங்கன்வாடி மையங்கள் மற்றும் 2.36 லட்சம் (69%) கிராம பஞ்சாயத்துக்கள் மற்றும் சமுதாய சுகாதார மையங்களில் குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

66 சதவீத பள்ளிகள் மற்றும் 60 சதவீத அங்கன்வாடி மையங்களில் குடிநீர் குழாய் இணைப்பு

கோவிட்-19 தொற்று மற்றும் ஊரடங்கால் ஏற்பட்ட இடையூறுகளுக்கு மத்தியிலும், ஆந்திர பிரதேசம், கோவா, குஜராத், ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், கேரளா, பஞ்சாப், சிக்கிம், தமிழ்நாடு மற்றும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் உள்ள அனைத்து பள்ளிகள், உண்டு உறைவிட பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள் ஆகியவற்றில் குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

தற்போது, 74 மாவட்டங்கள் மற்றும் 1.04 லட்சம் கிராமங்களில் உள்ள ஒவ்வொரு கிராம வீடுகளுக்கும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. ஜல் ஜீவன் திட்டத்தின் அமலாக்கத்தை கீழ்கண்ட இணைப்பில் காணலாம்.

66 சதவீத பள்ளிகள் மற்றும் 60 சதவீத அங்கன்வாடி மையங்களில் குடிநீர் குழாய் இணைப்பு

https://ejalshakti.gov.in/jjmreport/JJMIndia.aspx

2024ம் ஆண்டுக்குள் அனைத்து கிராம வீடுகளுக்கும், குடிநீர் குழாய் இணைப்பு வழங்க, மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் இணைந்து மேற்கொள்ளும் ஜல் ஜீவன் திட்டத்தை பிரதமர் செங்கோட்டையில் கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி அறிவித்தார். இத்திட்டத்தின் மொத்த மதிப்பு ரூ.3.60 லட்சம் கோடி.

From around the web