குடிபோதையில் அட்ராசிட்டி.. லத்தியை பிடுங்கி காவலர்களை சரமாரியாக தாக்கிய கொடூரம்!
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் பஞ்சு மார்க்கெட் நேரு சிலை அருகே கடந்த இரு தினங்களுக்கு முன்பு டாஸ்மாக்கில் மது அருந்தியவர்களிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் இசக்கி என்பவரை 6 பேர் தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த இசக்கி ரத்த காயங்களுடன் வடக்கு காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தார்.
புகாரின் பேரில், போலீசார் தாக்குதல் நடத்தியவர்களை நேரு சிலைக்கு பின்புறம் உள்ள மற்றொரு தனியார் மதுக்கடை அருகே தேடினர். அவர்களைப் பிடித்து விசாரித்த வடக்கு காவல் நிலைய காவலர்கள் ராம்குமார், கருப்பசாமி ஆகியோர், மறுநாள் காலை காவல் நிலையத்துக்கு வரும்படி கூறினர். அதற்கு மறுப்பு தெரிவித்த கும்பல், போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, போலீஸ்காரர் கையில் இருந்த லத்தியை பறித்து, சரமாரியாக தாக்கினர்.
இதைத் தடுக்கச் சென்ற மற்றொரு காவலரை அந்த கும்பல் அநாகரீகமாக திட்டித் தாக்கியது. இதில், காயமடைந்த போலீஸார் அளித்த தகவலின் பேரில், சம்பவ இடத்துக்கு வந்த மற்ற போலீஸார், இருவரையும் மீட்டு, அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். போலீசார் தாக்கப்படும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தாக்கப்பட்ட போலீஸார் அளித்த புகாரின் பேரில் கீழ ஆவாரம்பட்டியைச் சேர்ந்த பால்பாண்டி, கிளிராஜன், பாஞ்சாலி ராஜா, பாண்டியராஜ் உள்ளிட்ட 9 பேர் மீது வடக்கு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில், 7 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இருவரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!