குடிபோதையில் அட்டூழியம்.. 3 பசுக்களின் மடியை வெட்டி எறிந்த கொடூரன் அதிரடியாக கைது!

பெங்களூரு சாம்ராஜ்பேட்டை அருகே காட்டன்பேட்டை காவல் எல்லைக்குட்பட்ட பழைய பென்ஷன் மொகல்லா பகுதியில் கர்ணன் என்பவர் வசித்து வருகிறார். அவர் 3 பசுக்களை வளர்க்கிறார். அந்த பசுக்கள் வழக்கமாக பழைய பென்ஷன் மொகல்லா சாலை மற்றும் விநாயகா தியேட்டர் பகுதிகளில் இரை தேடி சுற்றித் திரிகின்றன. இதேபோல், நேற்று முன்தினம் நள்ளிரவில் தியேட்டருக்குப் பின்னால் 3 பசுக்கள் சுற்றித் திரிந்தன. அப்போது, அங்கு வந்த மர்ம நபர்கள் 3 பசுக்களின் மடியை பிளேடால் வெட்டியதாகத் தெரிகிறது. இதன் விளைவாக, மாடுகளின் மடியில் இருந்து ரத்தம் வெளியேறியது.
நேற்று காலை, பசுக்களின் மடி வெட்டப்பட்டு, ரத்தக் காயங்களுடன் சுற்றித் திரிவதைக் கண்டு பசுக்களின் உரிமையாளர் கர்ணனும், அப்பகுதி மக்களும் அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து, பசுக்களின் உரிமையாளர் கர்ணன் கூறுகையில், "நான் மிகவும் வருத்தமடைந்துள்ளேன். இரவில் எங்கள் வீட்டின் அருகே பசுக்களை கட்டி வைத்திருந்தோம், காலையில் இந்த கொடூரமான செயலை அறிந்து மனம் உடைந்தோம். இதை யார் செய்தார்கள் என்று எங்களுக்குத் தெரியவில்லை. இது தொடர்பாக காவல்துறையில் புகார் அளித்துள்ளோம். எனக்கு நீதி வேண்டும் என்று அவர் கூறினார்.
இந்த சம்பவம் அப்பகுதி முழுவதும் காட்டுத்தீ போல பரவியது. செய்தி அறிந்ததும், பாஜக மற்றும் இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் அங்கு விரைந்து வந்து போராட்டம் நடத்தினர். இதற்கிடையில், 3 பசுக்களின் மடியை வெட்டிய நபரை போலீசார் கைது செய்தனர். குற்றம் சாட்டப்பட்டவரை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். கைது செய்யப்பட்ட சையத் நஸ்ரு குற்றம் செய்தபோது குடிபோதையில் இருந்ததாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பசுவின் உரிமையாளருக்கு ஏற்பட்ட இழப்புக்கு அரசு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று மாநில பாஜக தலைவர் ரவிக்குமார் வலியுறுத்தியுள்ளார்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!
மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!
மார்கழி மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா? விரதமுறை, பலன்கள்!!
மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!