குடிபோதையில் தகராறு.. கூலித் தொழிலாளியை கொடூரமாக வெட்டிக் கொன்ற இளைஞர் கைது!
தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே உள்ள அனவரதநல்லூரைச் சேர்ந்த சுடலைமாடன் மகன் மகாராஜன் (35). இவருக்கு சுடலைமாடி என்ற மனைவியும், 2 ஆண் குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில், கொத்தனாராக வேலை செய்து வந்த மகாராஜன், அதே பகுதியை சேர்ந்த சுப்ரமணி மகன் முத்துக்குமார் (19) ஆகியோரும் நேற்று முன்தினம் இரவு மது அருந்த சென்றனர்.
அப்போது குடிபோதையில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்த முத்துக்குமார், மகாராஜனை அரிவாளால் சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த மகாராஜன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுபற்றி தகவல் கிடைத்ததும் முறப்பநாடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மகாராஜன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து இந்த கொலை சம்பவம் தொடர்பாக முத்துக்குமாரை கைது செய்த போலீசார் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!