குடி போதையில் ஆபாச பேச்சு.. போலீசாரை மிரட்டியவர் மன்னிப்புக் கேட்கும் வீடியோ வைரல்!
காவல்துறையை அவமதித்த சந்திரமோகன் மன்னிப்பு கேட்கும் வீடியோவை சென்னை காவல்துறை வெளியிட்டது. சென்னை கடற்கரை பகுதியில் நள்ளிரவில் குடிபோதையில் காரை நிறுத்திய தம்பதியிடம் ரோந்து போலீசார் விசாரணை நடத்தியபோது, உதயநிதிக்கு போன் செய்யவா என போலீசாரை திட்டிய வீடியோ வைரலாக பரவி வருகிறது.
மன்னிப்பு கேட்ட டம்மி பீஸ்... pic.twitter.com/l9ol1MkE59
— 𝗙𝗶𝗹𝗺 𝗙𝗼𝗼𝗱 𝗙𝘂𝗻 & 𝗙𝗮𝗰𝘁 (@FilmFoodFunFact) October 21, 2024
இதையடுத்து மயிலாப்பூரில் உள்ள தங்கும் விடுதியில் தங்கி இருந்த 2 பேரையும் கைது செய்த போலீஸார், போலீஸாரிடம் தகராறில் ஈடுபட்ட சந்திரமோகன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இது தொடர்பாக மயிலாப்பூர் போலீசார் ஆபாசமாக திட்டுதல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், கொலைமிரட்டல், சட்டவிரோதமாக தடுத்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். போலீசாரை அவமதித்த சந்திரமோகன் மன்னிப்பு கேட்டார்.
அவர் மன்னிப்புக் கோரிய வீடியோவை சென்னை காவல்துறை வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் குடிபோதையில் இருந்த அவர் போலீசாரை துஷ்பிரயோகம் செய்துள்ளார். இனிமேல் இப்படி பேசமாட்டேன். என்னை மன்னியுங்கள் என்றார்.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!